குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான வெற்றி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக்கின் நம்பிக்கையை அதிகரிக்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நேற்று (ஏப்ரல் 4) நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தியது.
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான வெற்றியின் மூலம் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
இந்த நிலையில், குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான வெற்றி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக்கின் நம்பிக்கையை அதிகரிக்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்த ஐபிஎல் சீசனில் இதுவரையிலான போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான நேற்றைய போட்டியே மிகவும் சிறந்த போட்டி. அணியின் கேப்டனாக ரியான் பராக்குக்கு இது மிகவும் முக்கியமான போட்டியாக அமைந்தது. ஆட்டத்தின் கடைசி ஓவரை துஷார் தேஷ்பாண்டேவுக்கு கொடுத்து மிகவும் கடினமான முடிவை எடுத்தார் ரியான் பராக்.
பொதுவாக மிகவும் அனுபவம் வாய்ந்த வீரருக்கு ஆட்டத்தின் கடைசி ஓவரை கேப்டன் கொடுப்பார். ஆனால், ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு 19-வது ஓவரைக் கொடுத்தார் ரியான் பராக். அந்த ஓவரை அபாரமாக வீசிய அவர் வெறும் 4 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். 19-வது ஓவரில் ஆர்ச்சர் 10 ரன்கள் கொடுத்திருந்தால் ஆட்டம் அங்கேயே முடிந்திருக்கும். ஆனால், அவர் அபாரமாக பந்துவீசியது கடைசி ஓவரில் துஷார் தேஷ்பாண்டேவுக்கு 11 ரன்களைக் கொடுத்தது.
கடைசி ஓவரில் தனது அபார யார்க்கர் பந்துவீச்சை வெளிப்படுத்திய துஷார் தேஷ்பாண்டே வெறும் 4 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது என்றார்.
Summary
Irfan Pathan has stated that the victory against the Gujarat Titans will boost the confidence of Rajasthan Royals captain Riyan Parag.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரியான் பராக் ஃபார்முக்கு வருவார், வெற்றி பெற்றுத் தருவார்: விக்ரம் ரத்தோர்

ஷுப்மன் கில் அரைசதம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 2-வது வெற்றி!

குஜராத்தை வென்றது ராஜஸ்தான்

யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜுரெல் அரைசதம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 211 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



