மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மீண்டும்.. மீண்டுமா? சிஎஸ்கே போராடி தோல்வி!

சிஎஸ்கே மீண்டும் தோல்வி! ஆர்சிபி அபாரம்...

News image

ஆர்சிபி அபாரம் | படம் ஆர்சிபி ட்விட்டர் (எக்ஸ்) - @RCBTweets

Updated On :5 ஏப்ரல் 2026, 5:45 pm

பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி விளையாட்டுத் திடலில் ஞாயிற்றுக்கிழமை(ஏப். 5) இரவு நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றியைப் பதிவு செய்தது.

முன்னதாக, இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 250 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக நடுவரிசையில் களமிறங்கிய டிம் டேவிட் வெறும் 25 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 280 ஸ்ட்ரைக்-ரேட்டில் 70* ரன்கள் குவித்தார். அவர் எட்டு சிக்ஸர்களைப் பறக்கவிட்டு வான வேடிக்கை நிகழ்த்தினார். அவருக்குப் பக்கபலமாக கேப்டன் ரஜத் படிதார் 19 பந்துகளில் 252 ஸ்ட்ரைக்-ரேட்டில் 48 ரன்கள் விளாசினார்.

அடுத்து, 251 ரன்கள் இலக்கை விரட்டிய சிஎஸ்கே அணியில் அதிகபட்சமாக நடுவரிசையில் களமிறங்கி போராடிய சர்ஃபராஸ் கான் 25 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். பின் வரிசையில் களமிறங்கிய பிரசாந்த் வீர் 43 ரன்களும் கடைசி ஓவர்களில் அதிரயில் மிரட்டிய ஜேமி ஓவர்டன் 16 பந்துகளில் 37 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அந்த அணி 19.4 ஓவர்களில் 207 ரன்களுக்கு ஆட்டமிழந்து 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

நடப்பு ஐபிஎல் தொடரில் தனது மூன்றாவது ஆட்டத்தில் தொடர்ந்து தோல்வியைப் பதிவு செய்த சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை தக்க வைத்துக்கொண்டது. இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவின் மொத்த ரன்-ரேட் -2.517 என்ற பரிதாப நிலையில் உள்ளது.

நடப்பு ஐபிஎல் சாம்பியனான ஆர்சிபி இந்த வெற்றியின் மூலம், 2.501 என்ற மொத்த ரன்-ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் கோலோச்சுகிறது.

Summary

Chennai Super Kings lose against RCB

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.