லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் தொடக்க வீரராக களமிறங்கியது பேசுபொருளாகியுள்ளது.
தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் லக்னௌ அணி 141 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தில்லி அணி 17.1 ஓவர்களில் 145/4 ரன்கள் எடுத்து வென்றது.
இந்தப் போட்டியில் லக்னௌ அணியின் கேப்டன் ரிஷப் பந்த் தொடக்க வீரராக களமிறங்கி ஆச்சரியமளித்தார். முன்னதாக, மிட்செல் மார்ஷ், எய்டன் மார்க்ரம் களமிறங்கி வந்தார்கள்.
தற்போது, மிட்செல் மார்ஷ் - ரிஷப் பந்த் களமிறங்குகிறார்கள். ரிஷப் பந்த் தொடக்க வீரராக களமிறங்கி 7 ரன்களில் ரன் அவுட் ஆனார். சிறப்பாகவே ஆட்டத்தை தொடங்கிய இவர் ரன் அவுட் ஆனது அதன் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.
டி20 போட்டிகளில் 23 முறை தொடக்க வீரராக களமிறங்கியுள்ள ரிஷப் பந்த் 159 ஸ்டிரைக் ரேட்டில் ஒரு சதம், 5 அரைசதம் அடித்து அசத்தினார். இந்நிலையில், ஐபிஎல் தொடரில் லக்னௌ அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கியது குறித்து ரிஷப் பந்த் பேசியிருப்பதாவது:
தொடர் முழுவதும் தொடக்க வீரராகவே களமிறங்குவேன் என்பது 50-50தான். நான் ரன் அவுட் ஆன விதத்தைப் புறக்கணிப்பதுதான் அதிலிருந்து மீண்டு வருவதற்கான சிறந்த வழி என நினைக்கிறேன்.
இந்த மாதிரியான ரன் அவுட்க்களை நாம் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், அதைப் பற்றி சிந்திப்பது நம்மை அழுத்தத்தில் தள்ளும் என நினைக்கிறேன்.
ரன்கள் குறைவாக இருந்ததால் இம்பாக்ட் வீரராக ஷாபாஸ் அகமதை களமிறக்கினோம். நான் தொடக்க வீரராக களமிறங்கியதால், மிடில் ஓவர்களில் ஆதிகம் செலுத்த நிகோலஸ் பூரணை நம்.5ல் இறக்கினோம்.
திடீரென விக்கெட் விழுந்தால் ஆயுஷ் பதோனியை களமிறக்குவதாக ஏற்கெனவே திட்டமிட்டு இருந்தோம். எதிரணியை அழுத்ததில் தள்ளாவிட்டாலும் எங்களது வீரர்களின் பந்துவீச்சு நன்றாகவே இருந்தது.
142 ரன்களை கட்டுப்படுத்தும்போது 16 ஒயிட் பந்துகள் வீசுவது நல்லதல்ல. அது அணியைப் பாதிக்கும். குறைவான ரன்களைக் கட்டுப்படுத்தும்போது கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும் என்றார்.
Summary
It's a 50-50 thing still: Pant on opening through entire IPL
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆயுஷ் பதோனியை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கியது ஏன்? ரிஷப் பந்த் விளக்கம்!

பந்துவீச்சாளர்கள் ரிஷப் பந்த்தின் விக்கெட்டினை எடுப்பதில்லை; முன்னாள் வீரர் கூறுவதென்ன?

ரிஷப் பந்த் பொறுப்புடன் விளையாட வேண்டும்: முகமது கைஃப்

அணியை சிறப்பாக வழிநடத்தும் ரிஷப் பந்த்; மிட்செல் மார்ஷ் பாராட்டு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



