வேறு அணியில் விளையாட விருப்பமில்லை: ஐபிஎல் தொடரில் ஓய்வை அறிவித்த ஆண்ட்ரே ரஸல்!
அதிரடி மன்னன் ஆண்ட்ரே ரஸல் ஓய்வு பெற்றது குறித்து...
அதிரடி மன்னன் ஆண்ட்ரே ரஸல் ஓய்வு பெற்றது குறித்து...
By இணையதளச் செய்திப் பிரிவு
Dineshkumar
அதிரடி மன்னன் ஆண்ட்ரே ரஸல் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மினி ஏலத்தில் அவருக்கு மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருந்த வேளையில், அதையெல்லாம் உதறித்தள்ளும்படியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மிகச் சிறந்த ஆல்ரவுண்டராக இருந்த ஆண்ட்ரே ரஸல் இந்த சீசனுடன் கேகேஆர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
மினி ஏலத்தில் அவருக்கு அதிக தொகை கொடுத்து எடுக்க சிஎஸ்கே போன்ற அணிகள் காத்திருந்த வேளையில் அதிர்ச்சி அளிக்கும் முடிவை அறிவித்துள்ளார்.
கேகேஆர் அணியில் பவர் கோச் என்ற பதவியில் தொடர்வதாகவும் மற்ற ஐபிஎல் அணிகளில் விளையாட விருப்பமில்லை எனவும் உருக்கமாக விடியோ வெளியிட்டுள்ளார்.
2014- 2025 வரை கேகேஆர் அணியில் ரஸல் விளையாடியுள்ளார். இந்தக் கடினமான முடிவு குறித்து அவர் கூறியதாவது:
வேறு அணிகளில் விளையாட விருப்பமில்லை...
கேகேஅர் ரசிகர்களுக்கு மிகப்பெரிய செய்தி. நான் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன். உலகின் மற்ற லீக்குகளில் தொடர்ந்து விளையாடுவேன்.
இன்ஸ்டாகிராம் உலகில் நாம் வாழ்கிறோம். என்னுடைய டைம்லைனில் நான் வேறு ஐபிஎல் அணிகளின் உடைகளைப் பார்க்கும்போது மிகவும் மோசமாக உணர்ந்தேன்.
எனக்கென ஒரு பாரம்பரியத்தை உண்டாக்க நினைக்கிறேன். உறக்கமில்லா பல இரவுகள் இருந்தன. கேகேஆர் அணியின் நிர்வாகிகள் உடன் பேசினேன். அவர்கள் என் மீது அன்பும் மரியாதையும் வைத்துள்ளார்கள்.
எனக்கு பவர் கோச் என்ற பதவியை வழங்கியுள்ளார்கள். அதுதான் நான். அதுதான் என்னை வரையறை செய்கிறது. பேட்டிங்கில் என்னுடைய அதிரடி பேட்டிங்கை பிரதிபலித்தது. தொடர்ந்து பயணிப்போம் என்றார்.
Action king Andre Russell has announced his retirement from the IPL.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது