மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று ராஜாஜி உத்சவ்!முதல்வா் நாளை குமரி வருகை!ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
/

2025 ஐபிஎல் கோப்பையை பஞ்சாப் அணி வெல்லும்.! -ஷ்ரேயாஸ் ஐயர்

பஞ்சாப் அணி ஐபிஎல் கோப்பை வெல்லும் என்று ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

News image
ஷ்ரேயாஸ் ஐயர்..
Updated On :19 மார்ச் 2025, 9:53 am

DIN

2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி கோப்பை வெல்லும் என்று ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

18-வது ஐபிஎல் தொடரில் முதலாவது போட்டி வருகிற 22 ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் காடன் மைதானத்தில் நடக்கவிருக்கிறது. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதவிருக்கின்றன. மார்ச் 25 ஆம் தேதி நடைபெறும் லீக் சுற்றின் 5-வது போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணி கில் தலைமையிலான குஜராத்தை எதிர்கொள்ள இருக்கிறது.

கடந்தாண்டு கொல்கத்தா அணிக்கு கோப்பையை வென்று தந்த ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் இருந்து கலட்டிவிடப்பட்டார். இதனால், மெகா ஏலத்தில் பஞ்சாப் அணி அவரை ரூ.26.75 கோடிக்கு எடுத்து புதிய கேப்டனாக நியமித்துள்ளது.

2024-25 ஆம் ஆண்டுகளில் சாம்பியன்ஸ் டிராபி உள்பட 5 கோப்பைகளை வென்ற ஷ்ரேயாஸ் ஐயர், இந்தாண்டு ஐபிஎல் கோப்பையை பஞ்சாப் அணிக்கான வென்று புதிய வரலாறு படைக்கவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இதுபற்றி ஷ்ரேயாஸ் ஐயர் கூறுகையில், “என்னை ஏலத்தில் எடுத்தபோது பஞ்சாப் அணி இதுவரை கோப்பையை வென்றிருக்கவில்லை. அந்த அணிக்கு கோப்பையை வென்று தர வேண்டும் என நினைத்தேன். அது ஒரு வரலாற்றுச் சாதனையாக இருக்கும். தொடரின் இறுதியில் பஞ்சாபி கொண்டாட்டங்கள் களைகட்டும்.

2008 ஆம் ஆண்டு மும்பை - பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் பால் பாய்-ஆக இருந்தேன். அதன்பின்னர், மும்பை 14 வயதுக்குள்பட்டோருக்கான அணியில் விளையாடினேன். அப்போது ஐபிஎல்லில் விளையாடிய பதான், ராஸ் டெய்லர், யுவராஜ் சிங்கின் ஆட்டங்கள் கண்ணுக்குள்ளே இருக்கின்றன. பால் பாய்யாக இருந்து தற்போது கேப்டனாக உயர்ந்துள்ளேன்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.