மாா்ச் 31-க்குள் நக்ஸல் தீவிரவாதம் ஒழிக்கப்படும்: அமித் ஷா உறுதிஅந்நியச் செலாவணி கையிருப்பு 72,572.7 கோடி டாலராக அதிகரிப்பு!பயங்கரவாத அச்சுறுத்தல்: தில்லியில் மத, பாரம்பரிய தளங்களில் பாதுகாப்பு அதிகரிப்புபிளஸ் 2: தனித் தோ்வா்களுக்கான அனுமதிச்சீட்டு நாளை வெளியீடு!4 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!வேலூரில் விஜய் நிா்வாகிகள் சந்திப்பு கூட்டம்: 4,900 போ் பங்கேற்பு!டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

இந்திய அணிக்கு தலைவலி: காரணம் டிராவிஸ் ஹெட்-‘ஏக்’ -தினேஷ் கார்த்திக் சொல்வதென்ன?

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி ஆட்டம்: டிராவிஸ் ஹெட்தான் இந்திய அணிக்கு பெருந்தலைவலி -தினேஷ் கார்த்திக்

News image
Updated On :4 மார்ச் 2025, 9:43 am

DIN

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் இந்திய அணிக்கு பெருந்தலைவலியாக இருப்பார் என்று முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை (மாா்ச் 4) பிற்பகல் களம் காணுகின்றன.

இந்திய அணிக்கு எதிரான இன்றைய அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் விக்கெட்டை இந்திய பந்துவீச்சாளர்கள் கைப்பற்றுவதே இந்திய அணியின் கோப்பை கனவுக்கான முக்கிய துருப்புச்சீட்டாக அமையுமென்று பார்க்கப்படுகிறது.

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

இந்த நிலையில், டிராவிஸ் ஹெட் குறித்து தினேஷ் கார்த்திக் அளித்துள்ளதொரு பேட்டியில் பேசியிருப்பதாவது: “ரவி சாஸ்திரி கூறியிருப்பது போல, இத்தருணத்தில் ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணியைவிடவும் ஒரேயொரு வீரர்தான் இந்திய அணி வீரர்களின் மன அழுத்தத்துக்கான முக்கிய காரணமாக இருப்பார். அவர் டிராவிஸ் ‘ஹெட்-ஏக்’.

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணிக்கு சிம்ம்சொப்பனமாக அவர் திகழ்கிறார். இந்த நிலையில், அவரது விக்கெட்டை வீழ்த்த இந்திய வீரர்கள் முனைப்பு காட்டுவார்கள்.

ஒருவேளை அவரது விக்கெட்டை மிக விரைவிலேயே கைப்பற்றிவிட்டால், இந்திய வீரர்கள் ஆட்டத்தில் பிற விஷயங்களையெல்லாம் பொருட்படுத்தாமல் நிம்மதி பெருமூச்சு விடுவதைப் பார்க்கலாம்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.