வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 43 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
இலங்கை மற்றும் வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் நேற்று (ஜூன் 25) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய வங்கதேச அணி 247 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் ஷாத்மன் இஸ்லாம் அதிகபட்சமாக 46 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, முஸ்ஃபிகர் ரஹீம் 35 ரன்களும், லிட்டன் தாஸ் 34 ரன்களும் எடுத்தனர்.
இலங்கை தரப்பில் அஷிதா ஃபெர்னாண்டோ மற்றும் சோனல் தினுஷா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். விஸ்வா ஃபெர்னாண்டோ 2 விக்கெட்டுகளையும், தரிண்டு ரத்னாயகே மற்றும் தனஞ்ஜெயா டி சில்வா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
பதும் நிசங்கா சதம்; 43 ரன்கள் முன்னிலை
முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 247 ரன்களுக்கு ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து, இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 290 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான பதும் நிசங்கா மற்றும் லகிரு உதாரா அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். லகிரு உதாரா 65 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் அடங்கும். இதனையடுத்து, பதும் நிசங்கா மற்றும் தினேஷ் சண்டிமால் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பதும் நிசங்கா சதம் விளாசி அசத்தினார். தினேஷ் சண்டிமால் 93 ரன்கள் எடுத்து 7 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
பதும் நிசங்கா 146 ரன்களுடனும், பிரபாத் ஜெயசூர்யா 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை அணி வங்கதேசத்தைக் காட்டிலும் 43 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
summary
Sri Lanka are in a strong position with a 43-run lead in the second Test against Bangladesh.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நியூசிலாந்தை வீழ்த்திய வங்கதேசம்; சமனில் ஒருநாள் தொடர்!

மூவர் அரைசதம் விளாசல்; பஞ்சாப் கிங்ஸுக்கு 3-வது வெற்றி!
உலகளாவிய சவால்களுக்கு இடையே சிறப்பான நிலையில் இந்தியா: உலக வங்கி

தோனி இல்லாவிட்டாலும் சிஎஸ்கே வலுவான அணிதான்: ஹென்ரிச் கிளாசன்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


