தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவுதொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

டெஸ்ட் போட்டிகளில் 2000 ரன்களைக் கடந்த ஷுப்மன் கில்!

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் 2000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

News image

சதம் விளாசிய மகிழ்ச்சியில் ஷுப்மன் கில் - படம் | AP

Updated On :21 ஜூன் 2025, 10:59 am

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் 2000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று (ஜூன் 20) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

ஷுப்மன் கில் 2000+ ரன்கள்

முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 359 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல் 42 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 101 ரன்களும் எடுத்தனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் கேப்டன் ஷுப்மன் கில் 127 ரன்களுடனும், துணைக் கேப்டன் ரிஷப் பந்த் 65 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

முதல் இன்னிங்ஸில் 127* ரன்கள் எடுத்தன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் ஷுப்மன் கில் புதிய சாதனை ஒன்றை படைத்தார். டெஸ்ட் போட்டிகளில் 2000 ரன்களைக் கடந்து அவர் சாதனை படைத்துள்ளார்.

இதுவரை இந்திய அணிக்காக 33 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷுப்மன் கில் 2000 ரன்களைக் கடந்துள்ளார். அதில் 6 சதங்கள் மற்றும் 7 அரைசதங்கள் அடங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.