தென்னாப்பிரிக்க வீரர் வியான் முல்டர் டெஸ்ட்டில் பிரையன் லாராவின் உலக சாதனையை முறியடிக்காமல் விட்டுக்கொடுத்து அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார்.
தென்னாப்பிரிக்கா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது, கடைசி டெஸ்ட் போட்டி குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் ஜூலை 6-இல் தொடங்கியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தென்னாப்பிரிக்கா அதன் முதல் இன்னிங்ஸில் 626/5 ரன்கள் எடுத்திருக்கையில் டிக்ளேர் செய்தது.
தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர் முச்சதம் விளாசி அசத்தினார்.
அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 334 பந்துகளில் 367* ரன்கள் எடுத்திருந்தார். பிரையன் லாராவின் 400* சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் டிக்ளேர் செய்தது அதிர்ச்சியாகவிருந்தது.
இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் வியான் முல்டர் பேசியதாவது:
பிரையன் லாரா ஒரு லெஜெண்ட். அவர் 400 ரன்களோ 401 ரன்களோ இங்கிலாந்துக்கு எதிராக அடித்தார். அவர் இருந்த உயரத்துக்கு அவரது சாதனை அப்படியே இருப்பதுதான் சிறப்பானது.
எனக்கு மீண்டும் 400 ரன்கள் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் இதையேதான் செய்வேன்.
இந்த முடிவுக்கு எனது பயிற்சியாளர் சுக்ரி கான்ராட்டும் சம்மதித்தார். ’லெஜெண்டின் சாதனை அவரிடமே இருக்கட்டும். என்னுடைய விதி நான் என்னாகுவேன் எனத் தெரியாது. ஆனால், பிரையன் லாராவின் சாதனை அவரிடமே இருக்க விடுவதுதான் நல்லது’ எனப் பயிற்சியாளரும் கூறியதாக வியான் முல்டர் கூறினார்.
இந்த நெகிழ்ச்சியான சம்பவத்துக்கு உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் வியான் முல்டருக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள்.
summary
South African player Wian Mulder has earned praise from all quarters for his unbeaten Test century, surpassing Brian Lara's world record.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

T20 உலகக் கோப்பை : அடுத்த போட்டிக்காக சென்னை வந்த இந்திய அணியினர்!

டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து

கின்னஸ் சாதனை... ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஜோஸ் பட்லர்! - வைரல் விடியோ

3 தேசிய சாதனைகள் படைத்த மணிப்பூர் வீராங்கனை மீராபாய் சானு!
வீடியோக்கள்
Vijay full speech | வேலூரில் பேசும்போது கண்கலங்கிய விஜய்! | TVK | Vellore
தினமணி வீடியோ செய்தி...

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

