தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

அணியில் முகமது சிராஜ் இடம்பெறாதது ஏன்? ரோஹித் சர்மா விளக்கம்!

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் முகமது சிராஜ் இடம்பெறாததற்கு அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளக்கமளித்துள்ளார்.

News image
முகமது சிராஜ் (கோப்புப் படம்)
Updated On :18 ஜனவரி 2025, 2:31 pm

DIN

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் முகமது சிராஜ் இடம்பெறாததற்கு அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளக்கமளித்துள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (ஜனவரி 18) அறிவித்தது. 15 பேர் கொண்ட இந்திய அணியை ரோஹித் சர்மா கேப்டனாக வழிநடத்துகிறார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் வேகப் பந்துவீச்சு வரிசையில் இடம்பெற்றுள்ளனர். முகமது சிராஜ் அணியில் இடம்பெறவில்லை.

ரோஹித் சர்மா விளக்கம்

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முகமது சிராஜ் அணியில் இடம்பெறாதது குறித்து கேப்டன் ரோஹித் சர்மா விளக்கமளித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

கேப்டன் ரோஹித் சர்மா, அணித் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர்

கேப்டன் ரோஹித் சர்மா, அணித் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணிக்காக புதிய பந்தில் பந்துவீசுவது மற்றும் ஆட்டத்தின் பிற்பகுதியில் பழைய பந்தில் பந்துவீசுவதுக்கு ஏற்ற மாதிரியான அணி எங்களுக்கு தேவைப்பட்டது. ஜஸ்பிரித் பும்ரா அணியில் இருக்கிறார். அவர் விளையாடுவாரா என்பது உறுதியாக தெரியவில்லை. ஆட்டத்தின் பிற்பகுதியில் பந்துவீசுவதற்காக அர்ஷ்தீப் சிங்கை அணியில் சேர்த்துள்ளோம்.

புதிய பந்தில் முகமது ஷமி எப்படி பந்துவீசுகிறார் என்பதை நாம் பார்த்தோம். இந்த இடத்தில்தான் முகமது சிராஜின் திறன் சற்று குறைவதாக நாங்கள் உணர்கிறோம். அணியில் மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறித்து நாங்கள் விரிவாக ஆலோசித்தோம். அனைத்து ஆல்ரவுண்டர்களும் அணியில் விளையாடும்படி அணி இருக்க வேண்டும் என நினைத்தோம். அதனால், அதற்கு தகுந்தவாறு அணியை தேர்வு செய்தோம். முகமது சிராஜ் அணியில் இடம்பெறாதது துரதிருஷ்டவசமானது. ஆனால், எங்களுக்கு வேறு தெரிவு இல்லை.

அர்ஷ்தீப் சிங் அதிக அளவிலான ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை. ஆனால், அவர் நீண்ட காலமாக வெள்ளைப் பந்து போட்டிகளில் (டி20 போட்டிகளில்) விளையாடி வருகிறார். அவருக்கு அதிக அளவிலான ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இல்லை என்பது எனக்குப் பெரிதாக தெரியவில்லை. அவர் நீண்ட காலம் வெள்ளைப் பந்து போட்டிகளில் விளையாடி, கடினமான ஓவர்களை வீசியுள்ளார். அவரால் அழுத்தமான சூழல்களில் சிறப்பாக பந்துவீச முடியும் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.

சில நேரங்களில் அணியில் சில வீரர்கள் இடம்பெறாமல் போகலாம். அது மிகவும் துரதிருஷ்டவசமானது. அனைவரையும் திருப்திபடுத்த வேண்டும் என்பது முடியாத விஷயம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.