டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ரஞ்சி டிராபி: காலிறுதிக்கான மும்பை அணியில் சூர்யகுமார், துபேவுக்கு இடம்!

ரஞ்சி டிராபி: காலிறுதிக்கான மும்பை அணியில் சூர்யகுமார், துபே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

News image
ஷிவம் துபே - சூர்யகுமார் யாதவ்
Updated On :4 பிப்ரவரி 2025, 11:01 am

DIN

ரஞ்சி டிராபி காலிறுதிக்கான மும்பை அணியில் சூர்யகுமார், ஷிவம் துபே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

2024-25 ரஞ்சி டிராபி தொடருக்கான மும்பை - ஹரியாணா அணிகள் மோதும் காலிறுதிப் போட்டி வருகிற பிப்ரவரி 8 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான 18 பேர் கொண்ட மும்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில் இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரும் ஆல் ரவுண்டருமான ஷிவம் துபேவும் இடம்பெற்றுள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிவந்த ஷிவம் துபே மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் இந்தாண்டுக்கான ரஞ்சி டிராபியில் இதுவரை ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டும் விளையாடியுள்ளனர். இவர்களைத் தவிர்த்து 4 முதல் தரப் போட்டிகளில் விளையாடியுள்ள ஹர்ஷ் டன்னாவுக்கு முதல் முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேகாலயாவுக்கு எதிரான போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 456 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று மும்பை அணி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

42 முறை ரஞ்சி டிராபி சாம்பியனான மும்பை அணி ரோஹ்தக்கில் உள்ள சௌதரி பன்சி லால் கிரிக்கெட் மைதானத்தில் ஹரியாணா அணியை எதிர்கொள்ளவிருக்கிறது.

மும்பை அணி விவரம்: அஜிங்கியா ரகானே(கேப்டன்), ஆயுஷ் மாத்ரே, அங்கிரிஷ் ரகுவன்ஷி, அமோக் பட்கல், சூர்யகுமார் யாதவ், சித்தேஷ் லாட், ஷிவம் துபே, ஆகாஷ் ஆனந்த், ஹார்திக் தாமோர், சூர்யான்ஷ், ஷர்துல் தாக்குர், ஷாம்ஸ் முலானி, தனுஷ் கோடியான், மோஹித் அவஸ்தி, சில்வெஸ்டர் டிசோவ்சா, ராய்ஸ்டன், அதர்வா, ஹர்சத் டன்னா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.