பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி! விடியோ வெளியிட்டு உறுதிசெய்தது ஐசிசி!
சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் நடத்துவதை ஐசிசி விடியோ வெளியிட்டு உறுதிசெய்துள்ளது.


சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் நடத்துவதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விடியோ வெளியிட்டு உறுதிசெய்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சாம்பியன்ஸ் டிராபிக்கான அறிமுக விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிக்கு இந்திய கிரிக்கெட் அணி செல்ல மறுத்து வரும் நிலையில் பாகிஸ்தானில் போட்டிகள் நடைபெறுவதை உறுதி செய்யும் விதமாக இந்த விடியோ வெளியிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான போட்டிகள் அடுத்தாண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் கராச்சி, லாகூர், ராவல்பிண்டி நகரங்களில் நடைபெறவுள்ளன.
மும்பையில் நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு பிறகு இந்திய அணி பாகிஸ்தானில் எந்தவொரு போட்டியிலும் விளையாடவில்லை.
இருப்பினும், இந்திய அரசு தனது அணியை எல்லை தாண்டி அனுப்ப ஆட்சேபம் தெரிவித்துவருகிறது. இது இந்திய கிரிக்கெட் வாரியத்தால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைபிரிட் மாடலில் ஐக்கிய அமீரகத்தின் துபையில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியமும் கோரிக்கை வைத்ததுள்ளது.
எனினும், எந்த ஆட்டத்தையும் பாகிஸ்தானுக்கு வெளியே நடத்த வேண்டாம் என பாகிஸ்தான் அரசு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் நிலையில், ஐசிசி புதிய விடியோவை வெளியிட்டுள்ளது. அதில் பாகிஸ்தானில் நடைபெறும் போட்டியில் எட்டு அணிகள் பங்கேற்கும் எனக் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதி ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 180 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது.
பெண்களுக்கான முதலாவது சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் 2027 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறுகின்றன. இந்தப் போட்டிகள் டி20 வடிவத்தில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...