ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பாகிஸ்தானில் நடைபெறாவிட்டால் சாம்பியன்ஸ் டிராபி எங்கு நடைபெறும்?

2025ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடைபெறாவிட்டால் இரண்டு நாடுகள் தேர்வில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
சாம்பியன்ஸ் டிராபி
Updated On :12 நவம்பர் 2024, 12:23 pm

DIN

முன்னதாக 2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் மார்ச் 9-ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளது.  இத்தொடரின் போட்டிகளை பாகிஸ்தானின் கராச்சி, லாகூர் மற்றும் ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் நடத்தப்படவுள்ளன.

தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு 16 ஆண்டுகளாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்வதில்லை.

ஹைபிரிட் மாடலுக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஒருநாள் உலகக் கோப்பையில் நாங்கள் எப்படி இந்தியாவுக்கு வந்தோமோ அதுபோல இந்தியாவும் பாகிஸ்தானுக்கு வந்து விளையாட வேண்டுமென பாக். விரும்புகிறது.

ஆனால், சாம்பியன்ஸ் டிராபிக்கான தொடருக்கு பாகிஸ்தானுக்குச் செல்ல இந்திய கிரிக்கெட் கவுன்சில் இந்தமுறையும் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானில் நடைபெறாவிட்டால் தென்னாப்பிரிக்கா அல்லது யுஏஇ நாட்டில் நடைபெறுமென தகவல் வெளியாகியுள்ளது.

கடைசியாக ஆசிய கோப்பையை பாகிஸ்தான் ஹைபிரிட் மாடலில் (பாக்., இலங்கையில்) நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.