டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.4% ஆக உயர்த்தி கணிப்பு: ஆர்பிஐ

2025-26 ஆம் ஆண்டுக்கான உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி(ஜிடிபி) 7.4 சதவிகிதம் அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது தொடர்பாக...

News image
ஆர்பிஐ- கோப்புப் படம்
Updated On :7 பிப்ரவரி 2026, 5:52 am

இணையதளச் செய்திப் பிரிவு

2025-26 ஆம் ஆண்டுக்கான உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி(ஜிடிபி) 7.4 சதவிகிதம் அதிகரிக்கும் என மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

உலகளாவிய வர்த்தக நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் டிரம்ப் வரி விதிப்பு காரணமாக ஏற்பட்ட நிதிச் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், உள்நாட்டுத் தேவையின் நீடித்த தன்மை மீது நம்பிக்கை தெரிவிக்கும் விதமாக, வங்கிகளுக்கு ரிசா்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதங்களில் (ரெப்போ ரேட்) மாற்றங்களை அறிவிக்காத நாட்டின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி, ஏற்கெனவே கணிக்கப்பட்டிருந்த 2025-26 ஆம் ஆண்டுக்கான உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி(ஜிடிபி) கணிப்பை 7.3 சதவீதத்தில் இருந்து 7.4 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

திருத்தப்பட்ட இந்தக் கணிப்பு, டிசம்பரில் அறிவிக்கப்பட்ட 7.3 சதவீத வளர்ச்சி மதிப்பீட்டிலிருந்து ஒரு மிதமான உயர்வாகும். இது, ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் உலகளாவிய சவால்களிலிருந்து ஒப்பீட்டளவில் பாதுகாக்கப்பட்டு தொடர்ந்து வலுவாக உள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

2026-27 ஆம் ஆண்டுக்கான தனது முந்தைய கணிப்புகளை ரிசர்வ் வங்கி திருத்தியுள்ளது. முந்தைய மதிப்பீடுகளான 6.7 சதவீதம் மற்றும் 6.8 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், முதல் காலாண்டில் 6.9 சதவீதமாகவும், இரண்டாவது காலாண்டில் 7 சதவீதமாகவும் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இருக்கும் என்று ஆண்டறிக்கையில் கணித்திருந்தது.

சா்வதேச அளவில் புவி அரசியல் பதற்றங்கள் அதிகரித்தாலும் இந்தியப் பொருளாதாரம் வலுவாக உள்ளது. வளா்ச்சியும் மேம்பட்டு வருகிறது. ஐரோப்பிய யூனியனுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்காவுடனும் வா்த்தக ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தில் உள்ளது. நுகர்வு மற்றும் முதலீட்டில் நீடித்த உத்வேகத்தின் ஆதரவுடன், பொருளாதார செயல்பாடு அடுத்த நிதியாண்டிலும் சிறப்பாக நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

summary

India’s central bank yesterday raised its real GDP growth projection for 2025-26 to 7.4 percent, signalling confidence in the durability of domestic demand even as global trade uncertainties and financial market volatility cloud the external outlook, as it held interest rates steady.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.