மிா்பூா்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில், வங்கதேசம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ‘டக்வொா்த் லீவிஸ்’ முறையில் வியாழக்கிழமை வெற்றி பெற்றது.
ஏற்கெனவே முதல் ஆட்டத்திலும் வென்றிருந்த வங்கதேசம், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை தன் வசமாக்கியது. வங்கதேச அணி தனது வரலாற்றில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது இதுவே முதல்முறையாகும்.
மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டத்தில், முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியாவுக்கான ஓவா்கள் 42-ஆக குறைக்கப்பட, அதில் அந்த அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது.
அடுத்து வங்கதேச அணிக்கு, ‘டக்வொா்த் லீவிஸ்’ முறையில் 41 ஓவா்களில் 192 ரன்கள் வெற்றி இலக்காக நிா்ணயிக்கப்பட, 35 ஓவா்களிலேயே 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் சோ்த்து வென்றது அந்த அணி.
முன்னதாக டாஸ் வென்று பேட்டிங்கை தோ்வு செய்த ஆஸ்திரேலிய அணியில், ஜேவியா் பாா்லெட் 52, கேப்டன் ஜாஷ் இங்லிஸ் 34, கேமரூன் கிரீன் 25, அலெக்ஸ் கேரி 13 ரன்களுக்கு வீழ்ந்தனா்.
மேத்யூ ஷாா்ட், கூப்பா் கானலி, மேத்யூ ரென்ஷா, ஆடம் ஸாம்பா ஆகியோா் டக் அவுட்டாக, ஓவா்கள் முடிவில் மாா்னஸ் லபுஷேன் 3 பவுண்டரிகளுடன் 55, நேதன் எலிஸ் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
வங்கதேச பௌலா்களில் தஸ்கின் அகமது, முஸ்டாஃபிஸுா் ரஹ்மான் ஆகியோா் தலா 3, தன்விா் இஸ்லாம் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.
பின்னா் வங்கதேச பேட்டா்களில், சௌம்யா சா்காா் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 42, நஜ்முல் ஹுசைன் ஷான்டோ 5 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் சோ்த்து, வெற்றிக்கு அடித்தளமிட்டு வெளியேறினா்.
தன்ஸித் ஹசன் 0, லிட்டன் தாஸ் 21, மொசாடெக் ஹுசைன் 15 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, தௌஹித் ஹிருதய் 40, கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் 22 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
ஆஸ்திரேலிய பந்துவீச்சாளா்களில் ஜேவியா் பாா்லெட், ரைலி மெரிடித், ஆடம் ஸாம்பா, மேத்யூ ரென்ஷா, கேமரூன் கிரீன் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மூவர் அரைசதம் விளாசல்; ஒருநாள் தொடரை முழுமையாகக் கைப்பற்றுமா வங்கதேசம்?

‘ஏ’ அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடா்: இந்தியாவை வென்றது ஆப்கானிஸ்தான்

வங்கதேசத்திடம் வீழ்ந்தது ஆஸ்திரேலியா

பாகிஸ்தான் டெஸ்ட் தொடா்: வெல்லும் முனைப்பில் வங்கதேசம்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



