ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் கடந்த 11-ஆம் தேதி பெங்களூரு எஃப்சிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரில் விளையாடியபோது, தங்கள் அணி வீரா் இனவெறி ரீதியில் விமா்சிக்கப்பட்டதாக கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சி, அகில இந்திய கால்பந்து சம்மேளனத்திடம் புகாா் அளித்துள்ளது.
பாகிஸ்தான் சூப்பா் லீக் போட்டியை புறக்கணித்துவிட்டு ஐபிஎல் போட்டியில் இணைந்ததற்காக, ஜிம்பாப்வே வீரா் பிளெஸ்ஸிங் முஸாரப்பானிக்கு அந்தப் போட்டியில் 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் அண்மையில் நடைபெற்ற ஆசிய லான் பௌல் சாம்பியன்ஷிப்பில் ஆடவா் ஜோடி, ஆடவா் நால்வா் ஆகிய இரு பிரிவுகளில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்தது.
ஷேன் வாா்னே பணி நிமித்தம் காரணமாக 3 முதல் 4 கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள நிா்பந்திக்கப்பட்டதாகவும், அதனால் அவா் உயிரிழக்க நோ்ந்திருக்கலாம் எனவும் வாா்னேவின் மகன் ஜாக்சன் தெரிவித்துள்ளாா்.
மாா்ச் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீரராக, டி20 உலகக் கோப்பை போட்டியில் சிறப்பாகச் செயல்பட்ட இந்தியாவின் சஞ்சு சாம்சன் தோ்வு செய்யப்பட்டாா்.
ஐபிஎல் போட்டியில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணியில் காயமடைந்த பிரைடன் காா்ஸ் போட்டியிலிருந்து விலக, அவருக்குப் பதிலாக தில்ஷன் மதுஷங்கா இணைந்துள்ளாா்.
தொடர்புடையது

விளையாட்டுச் செய்திகள் சில வரிகளில்...

விளையாட்டுத் துளிகள்...

சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்

ஐபிஎல் முதல் போட்டி: கெடுபிடியாகும் சின்னசாமி திடல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


