டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய பி.வி. சிந்து

சிங்கப்பூரில் நடைப்பெற்று வரும் ஒபன் பாட்மின்டன் போட்டியில் அரையிறுதியில் வெற்றிப்பெற்று இறுதிச் சுற்றுக்கு தேர்வாகியுள்ளார் இந்தியாவின் நட்சத்திர வீரர் பி.வி. சிந்து. 

News image
கோப்புப் படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 9:48 am

DIN

சிங்கப்பூரில் நடைபெற்றுவரும் ஓபன் பாட்மின்டன் போட்டியில் அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியுள்ளார் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து. 

கடந்த மே மாதத்துக்குப் பிறகு முதல்முறையாக ஒரு போட்டியின் அரையிறுதிக்கு பி.வி. சிந்து முன்னேறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரையிறுதியில் சிந்து, ஜப்பான் வீராங்கனை சேனா கவாகமியை எதிா்கொண்டு விளையாடினார். தொடக்கம் முதலே சிந்து ஆதிக்கம் செலுத்தினார். இறுதியில் 21-15, 21-7 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குத் தேர்வாகியுள்ளார். 

இதுவரை சேனாவை மூன்று முறை சந்தித்திருக்கும் சிந்து மூன்றிலுமே வென்றிருக்கிறாா் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.