புது தில்லி: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மீண்டும் ரவி சாஸ்திரி தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது. இதற்காக அவர் மீண்டும் விண்ணப்பிக்கிறார்.
இதேபோல் உதவிப் பயிற்சியாளர்களாக இருந்த சஞ்சய் பாங்கர் (பேட்டிங்), பாரத் அருண் (பவுலிங்), ஸ்ரீதர் (பீல்டிங்)ஆகியோரும் தங்களின் பழைய பதவிகளுக்கு விண்ணப்பிக்கவுள்ளனர்.
பயிற்சியாளர் பதவிக்கான விளம்பரம் இன்னும் இரு தினங்களில் வெளியாகவுள்ளது. அது வெளியானதும் ரவி சாஸ்திரி உள்ளிட்டோர் விண்ணப்பம் செய்யவுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த டங்கன் பிளெட்சரின் பதவிக்காலம் கடந்த 2015 உலகக் கோப்பை போட்டியோடு முடிவுக்கு வந்தது.
இதன்பிறகு பயிற்சியாளர் நியமிக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக ரவி சாஸ்திரி இயக்குநராக நியமிக்கப்பட்டார். அவருடைய உதவி பயிற்சியாளர்களாக சஞ்சய் பாங்கர், பாரத் அருண், ஸ்ரீதர் ஆகியோர் செயல்பட்டு வந்தனர். இவர்களுடைய பதவிக்காலம் டி20 உலகக் கோப்பை போட்டியோடு முடிவுக்கு வந்தது.
இதையடுத்து புதிய பயிற்சியாளரை பிசிசிஐ தேடி வருகிறது. இந்த நிலையில் ரவி சாஸ்திரி தலைமையிலான கூட்டணி மீண்டும் பயிற்சியாளர், உதவிப் பயிற்சியாளர் பதவிகளுக்கு தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக பிசிசிஐ மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், "ரவி சாஸ்திரி மற்றும் உதவிப் பயிற்சியாளர்களின் செயல்பாடு பிசிசிஐக்கு திருப்தியளிப்பதாக அமைந்தது. எனினும் மறுபடியும் அதே பதவிக்கு வரவேண்டும் என்றால் அதற்கு முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சியாளர் பதவிக்கான விளம்பரம் விரைவில் வெளியிடப்பவுள்ளது. அதற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்' என்றார்.
பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், "பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்ட அனுராக் தாக்குரை ரவி சாஸ்திரி மற்றும் உதவிப் பயிற்சியாளர்கள் தில்லியில் சந்தித்துப் பேசியுள்ளனர். அந்த சந்திப்பு சுமூகமாக நடைபெற்றது. அப்போது கடந்த 18 மாதங்களில் ரவி சாஸ்திரி மற்றும் உதவிப் பயிற்சியாளர்களின் செயல்பாடு சிறப்பாக இருந்ததாக அனுராக் தாக்குர் பாராட்டியுள்ளார்.
அதேநேரத்தில் தகுதியுள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என ஏற்கெனவே பிசிசிஐ அறிவித்துவிட்டது. அதனால் மற்ற விண்ணப்பதாரர்களைப் போலவே ரவி சாஸ்திரி கூட்டணியும் முறையாக விண்ணப்பிப்பதுதான் நியாயமாக இருக்கும்.
பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் "லெவல் 3' பயிற்சியாளர் படிப்பை முடித்திருப்பதோடு, சீனியர் அணிகளுக்கு பயிற்சியளித்தவராக இருக்க வேண்டும். இல்லையெனில் தனது நாட்டுக்காக 50 சர்வதேச போட்டிகளில் ஆடியிருக்க வேண்டும் என்பதுதான் தற்போது கடைப்பிடிக்கப்படும் விதிமுறை. பயிற்சியாளர் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று கூறினால், 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ரவி சாஸ்திரியின் பெயரை பரிசீலிக்க முடியாது' என தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் ராஜ்நாத் சிங் சாலைவலம்!

முதலீடு செய்யப் போகிறீர்களா? இந்த 10 விஷயங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

தேனியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் பலி

நீரைக் கண்ட குழந்தைபோல்.. குதூகலமாக ஆட்டம் போட்ட கோயில் யானை பிரக்ருதி!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


