ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் மூன்று முறை விளையாடியபோதும் ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லமுடியாத சோகம் பெங்களூர் அணிக்கு ஏற்பட்டுள்ளது.
2009, 2011 ஆகிய ஆண்டுகளில் இறுதிச்சுற்றில் தோற்ற பெங்களூர் அணி, இந்தமுறை ஹைதராபாதை வீழ்த்தி முதல்முறையாக கோப்பையை வெல்வதில் தீவிரமாக இருந்தது. அதேநேரத்தில் முதல்முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கும் ஹைதராபாத், இந்த வாய்ப்பை கோட்டை விட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தது. இதனால் பரபரப்பான போட்டியை அனைவரும் எதிர்பார்த்தார்கள்.
2016 ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதிச்சுற்றில் ஹைதராபாத் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியைத் தோற்கடித்து சாம்பியன் ஆகியுள்ளது. பெங்களூர் அணியின் கிறிஸ் கெயில் 38 பந்துகளில் 8 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் குவித்தபோதும் பெங்களூர் அணியால் வெற்றியைப் பெறமுடியாமல் போனது.
2009-ல் டெக்கான் சார்ஜர்ஸ் அணியிடம் தோற்றது பெங்களூர். அப்போது அந்த அணியின் கேப்டனாக அனில் கும்பிளே இருந்தார். தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் ஆடிய டெக்கான் சார்ஜர்ஸ் 143 ரன்கள் பெற்றது. பிறகு ஆடிய பெங்களூர் அணி, 137 ரன்கள் எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
2011-ல் சென்னையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோற்றது பெங்களூர். அப்போட்டியில் முதலில் ஆடிய சென்னை 205 ரன்கள் குவித்தது. பிறகு ஆடிய பெங்களூர் அணியால் 147 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது. அப்போது பெங்களூர் அணியின் கேப்டனாக வெட்டோரி செயல்பட்டார்.
இந்த மூன்று இறுதிப் போட்டிகளிலும் இடம்பிடித்த விராட் கோலி, இந்தமுறை கேப்டனாக இருந்தும் அவராலும் பெங்களூர் அணிக்கு ஐபிஎல் கோப்பையைப் பெற்றுத் தரமுடியவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏப்.26-ல் சூர்யாவின் கருப்பு இசை வெளியீட்டு விழா!

பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!

ஜன நாயகன் லீக்: படத்தொகுப்பாளர் இடைநீக்கம்!

ஜியோ பிளாட்ஃபார்ம் லாபம் 13% உயர்வு!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


