மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஐபிஎல்-லால் வாய்ப்பு இழந்த பாண்டியா, பவன் நெகி!

சமீபகாலமாக இந்திய அணியில் இடம்பிடித்த பவன் நெஹி, பாண்டியா ஆகிய இருவரும் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்துக்குத் தேர்வாகவில்லை.

News image
Updated On :26 மே 2016, 10:57 am

ஜிம்பாப்வே, மேற்கிந்தியத் தீவுகள் என இரு சுற்றுப்பயணங்களுக்கும் அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் புதுமுகங்கள் சிலர் இடம்பிடித்துள்ளார்கள்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாக்குர் புதுமுக வீரராக இடம்பிடித்துள்ளார். ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள்/டி20 போட்டிகளுக்கு, தோனி தலைமையிலான இந்திய அணியில் ஃபைஸ் ஃபஸல், யுவேந்திர சாஹல், ஜெயந்த் யாதவ், கருண் நாயர், மன்தீப் சிங் ஆகிய 5 பேர் புதுமுக வீரர்களாகத் தேர்வாகியுள்ளார்கள்.

அதேசமயம், சமீபமாக இந்திய அணியில் இடம்பிடித்த பவன் நெஹி, பாண்டியா ஆகிய இருவரும் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்துக்குத் தேர்வாகவில்லை. இருவரும் ஐபிஎல்-லில் மோசமாக விளையாடியதால் தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

2016-ம் ஆண்டு 16 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடினார் ஹர்திக் பாண்டியா. ஆனால் ஜிம்பாப்வே-வில் இந்திய அணி ஆடவுள்ள 3 ஒருநாள் 2 டி20 போட்டிகளுக்கு இவர் தேர்வு செய்யப்படவில்லை.

மும்பை அணிக்காக 11 போட்டிகளில் விளையாடிய பாண்டியா, 44 ரன்களும் 3 விக்கெட்டுகளும் மட்டுமே எடுத்தார்.

Story image

நெஹி அதை விட மோசம். டெல்லி அணிக்காக 8 போட்டிகளில் விளையாடி 57 ரன்களும் ஒரு விக்கெட்டும் மட்டுமே எடுத்ததால் தேர்வுக்குழு இவரையும் ஜிம்பாப்வே தொடருக்குத் தேர்வு செய்யவில்லை.

இருவரும் தேர்வு செய்யாததற்கு இதுவும் ஒரு காரணம் என்பதோடு, ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டி என்பதால் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்காக இருவரும் அணியில் சேர்க்கப்படவில்லை. பாண்டியா தொடர்ந்து விளையாடி வருவதால் அவருக்கான ஓய்வு என்றும் இதைக் கருதலாம் என்று பிசிசிஐ தரப்பு கூறியுள்ளது. அதேசமயம் உலகக் கோப்பை அணியில் இடம்பெற்று, ஐபிஎல் ஏலத்தில் ரூ. 8.5 கோடி என டெல்லி அணிக்குத் தேர்வான நெகியால் இந்த திடீர் புகழ், பணத்தை சரியாகக் கையாளமுடியவில்லை. இதுதான் அவருடைய மோசமான ஆட்டத்துக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.

இருவரும் இளைஞர்கள். நல்ல எதிர்காலம் கொண்டவர்கள். வருங்காலப் போட்டிகளில் அவர்கள் தேர்வு செய்ய வாய்ப்புண்டு என்று பிசிசிஐ தரப்பு கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.