ஐபிஎல் மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
லீக் போட்டிகளில் இன்னும் நான்கு ஆட்டங்களே மீதமுள்ளன. அதில் மூன்று ஆட்டங்கள் அடுத்தக் கட்டத்தை நிர்ணயிக்க உள்ளன. பிளே ஆஃப்-பில் போட்டி போடக்கூடிய நான்கு அணிகளையும் தேர்வு செய்கின்றன.
ஆம். இன்றைய தேதி வரை ஓர் அணியும் பிளே ஆஃப் போட்டிக்குத் தகுதி பெறவில்லை. தோற்றாலும் நென் ரன் ரேட் படி நிச்சயம் தகுதி பெறும் என்கிற நிலைமை ஹைதராபாத் அணிக்கே உள்ளது.
தற்போதைய நிலைமையில் புணே, பஞ்சாப் தவிர இதர 6 அணிகளும் பிளே ஆஃப் வாய்ப்புக்குப் போட்டி போடுகின்றன. அனைவருக்கும் இன்னும் ஒரு போட்டி மட்டுமே மீதமுள்ளன. புணே - பஞ்சாப் போட்டியில் தோற்கிற அணி கடைசி இடத்தைப் பிடிக்கும். இதன்படி அடுத்து நடைபெறவுள்ள நான்கு போட்டிகளும் ஏதோ ஒரு விதத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன.
போட்டிகள்
சனி
புணே - பஞ்சாப்
குஜராத் - மும்பை
ஞாயிறு
கொல்கத்தா - ஹைதராபாத்
டெல்லி - பெங்களூர்
பிளே ஆஃப் சாத்தியக்கூறுகள்
குஜராத், ஹைதராபாத், டெல்லி வெற்றி பெற்றால்
ஹைதராபாத் (18), குஜராத் (18), டெல்லி (16) ஆகிய அணிகள் தகுதி பெறும். பெங்களூர், கொல்கத்தா, மும்பை ஆகிய அணிகள் 14 புள்ளிகளுடன் இருக்கும். அதிக நெட் ரன் ரேட் உள்ள அணி தகுதி பெறும்.
குஜராத், ஹைதராபாத், பெங்களூர் வெற்றி பெற்றால்
ஹைதராபாத் (18), குஜராத் (18), பெங்களூர் (16) ஆகிய அணிகள் தகுதி பெறும். டெல்லி, கொல்கத்தா, மும்பை, ஆகிய அணிகளுடன் 14 புள்ளிகளுடன் இருக்கும். அதிக நெட் ரன் ரேட் உள்ள அணி தகுதி பெறும்.
மும்பை, கொல்கத்தா, டெல்லி வெற்றி பெற்றால்
ஹைதராபாத், டெல்லி, கொல்கத்தா, மும்பை, குஜராத் ஆகிய 5 அணிகள் 16 புள்ளிகளுடன் இருக்கும். அதில் அதிக நெட் ரன் ரேட் உள்ள உள்ள 4 அணிகள் தகுதி பெறும்.
மும்பை, கொல்கத்தா, பெங்களூர் வெற்றி பெற்றால்
ஹைதராபாத், பெங்களூர், கொல்கத்தா, மும்பை, குஜராத் ஆகிய 5 அணிகள் 16 புள்ளிகளுடன் இருக்கும். அதில் அதிக நெட் ரன் ரேட் உள்ள உள்ள 4 அணிகள் தகுதி பெறும்.
குஜராத், கொல்கத்தா, டெல்லி வெற்றி பெற்றால்
குஜராத் (18), ஹைதராபாத் (16), கொல்கத்தா (16), டெல்லி (16) ஆகிய அணிகள் தகுதி பெறும்.
குஜராத், கொல்கத்தா, பெங்களூர் வெற்றி பெற்றால்
குஜராத் (18), பெங்களூர் (16), ஹைதராபாத் (16), கொல்கத்தா (16) ஆகிய அணிகள் தகுதி பெறும்.
மும்பை, ஹைதராபாத், டெல்லி வெற்றி பெற்றால்
16 புள்ளிகளுடன் ஹைதராபாத், மும்பை, டெல்லி, குஜராத் ஆகிய அணிகள் தகுதி பெறும்.
மும்பை, ஹைதராபாத், பெங்களூர் வெற்றி பெற்றால்
16 புள்ளிகளுடன் ஹைதராபாத், பெங்களூர், மும்பை, குஜராத் ஆகிய அணிகள் தகுதி பெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாய் சுதர்சன் சதம்: பெங்களூருக்கு 206 ரன்கள் இலக்கு!

ஏப்.26-ல் சூர்யாவின் கருப்பு இசை வெளியீட்டு விழா!

பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!

ஜன நாயகன் லீக்: படத்தொகுப்பாளர் இடைநீக்கம்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


