மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: தோனி அணியைக் கீழே தள்ளிய கோலி அணி!

4 ஓவர்கள் பந்து வீசி 22 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட் வீழ்த்திய பெங்களூர் அணியின் ஷேன் வாட்சன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

News image
Updated On :10 மே 2016, 5:30 am

ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 ரன்களில் வெற்றியை நழுவவிட்டது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. கடைசி பந்தில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்த பஞ்சாப் அணியால் 2 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

முதலில் ஆடிய பெங்களூர் அணி, 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. டிவில்லியர்ஸ் 35 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். இதில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகள் அடங்கும். பஞ்சாப் தரப்பில் முரளி விஜய், 57 பந்துகளைச் சந்தித்து 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 12 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடங்கும்.

4 ஓவர்கள் பந்து வீசி 22 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட் வீழ்த்திய பெங்களூர் அணியின் ஷேன் வாட்சன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதனால் பெங்களூர் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அடுத்தச் சுற்றுக்கான வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. மேலும் அந்த அணி 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதுவரை 10 போட்டிகளில் பங்கேற்று 7 தோல்விகளைச் சந்தித்துள்ள பஞ்சாப் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது.

புள்ளிகள் பட்டியல்

அணிகள்போட்டிகள்வெற்றிதோல்விபுள்ளிகள் நெட் ரன்ரேட்
குஜராத்117414-0.138
ஹைதராபாத்96312+0.609
கொல்கத்தா106412+0.206
டெல்லி95410+0.309
மும்பை105510-0.447
பெங்களூர்9458+0.032
புணே10376+0.118
பஞ்சாப்10376-0.567

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.