ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 37-வது லீக் ஆட்டத்தில் 85 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸ் அணியைத் தோற்கடித்தது சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்.
அந்த அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவன் 57 பந்துகளில் 1 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் குவித்தார். வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா 3 ஓவர்களில் 15 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பையை சரிவுக்குள்ளாக்கினார். ஆசிஷ் நெஹ்ரா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஹைதராபாத் 6-வது வெற்றியைப் பெற்றுள்ளது. அதேநேரத்தில் 10 ஆட்டங்களில் விளையாடியுள்ள மும்பை அணி 5-வது தோல்வியை சந்தித்துள்ளது.
சுருக்கமான ஸ்கோர்
ஹைதராபாத் 177/3 ஷிகர் தவன் 82* (57), டேவிட் வார்னர் 48 (33), யுவராஜ் சிங் 39 (23), ஹர்பஜன் சிங் 2வி/29
மும்பை 92 ஹர்பஜன் சிங் 21*(22), கிருனால் பாண்டியா 17 (11), ஆசிஷ் நெஹ்ரா 3வி/15, முஸ்தாபிஜுர் 3வி/16
பிரவீண் குமார், தினேஷ் கார்த்திக் அபாரம்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 38-ஆவது லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ûஸ தோற்கடித்தது குஜராத் லயன்ஸ்.
முதலில் விளையாடி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்தது கொல்கத்தா. யூசுப் பதான் 41 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 63, ஷகிப் அல்ஹசன் 49 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். குஜராத் தரப்பில் பிரவீண் குமார் 4 ஓவர்களில் 19 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய குஜராத் அணி 18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்து வெற்றி கண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 29 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் குவித்தார். பிரென்டன் மெக்கல்லம், ஆரோன் ஃபிஞ்ச் ஆகியோர் தலா 29 ரன்கள் சேர்த்தனர். பிரவீண் குமார் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் 7-வது வெற்றியைப் பெற்ற குஜராத் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
சுருக்கமான ஸ்கோர்
கொல்கத்தா 158/4 யூசுப் பதான் 63 (41), ஷகிப் அல்ஹசன் 66 (49), பிரவீண் குமார் 4வி/19
குஜராத் 164/5 தினேஷ் கார்த்திக் 51 (29), பிஞ்ச் 29 (10)
புள்ளிகள் பட்டியல்
| அணிகள் | போட்டிகள் | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | நெட் ரன்ரேட் |
|---|---|---|---|---|---|
| குஜராத் | 11 | 7 | 4 | 14 | -0.138 |
| ஹைதராபாத் | 9 | 6 | 3 | 12 | +0.609 |
| கொல்கத்தா | 10 | 6 | 4 | 12 | +0.206 |
| டெல்லி | 9 | 5 | 4 | 10 | +0.309 |
| மும்பை | 10 | 5 | 5 | 10 | -0.447 |
| புணே | 10 | 3 | 7 | 6 | +0.118 |
| பெங்களூர் | 8 | 3 | 5 | 6 | +0.027 |
| பஞ்சாப் | 9 | 3 | 6 | 6 | -0.622 |
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,330.8 கோடி டாலராக உயர்வு!

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?

லாரன்ஸ் பிஷ்னோய் குறித்த வெப் சீரிஸை வெளியிட வேண்டாம்! - ஓடிடி நிறுவனத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


