தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

ஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: முத்திரை பதித்த முரளி விஜய்! தொடர் தோல்வியில் தோனி அணி!

மும்பை அணி, 10 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. புணே அணி, 4 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:10 pm

எழில்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 28-ஆவது லீக் ஆட்டத்தில் 23 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் லயன்ஸை தோற்கடித்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப். அந்த அணியின் அக்ஷர் படேல் ஹாட்ரிக் உள்பட 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

புதிய கேப்டனான முரளி விஜய் தலைமையில் களமிறங்கிய முதல் ஆட்டத்திலேயே வெற்றி கண்டுள்ள பஞ்சாப், தொடர் தோல்வியிலிருந்து மீண்டுள்ளது. முன்னதாக தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் தோற்றிருந்தது. இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள பஞ்சாப், 2-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. பஞ்சாப் தரப்பில் அக்ஷர் படேல் 4 ஓவர்களில் 21 ரன்களை மட்டுமே கொடுத்து ஹாட்ரிக் உள்பட 4 விக்கெட்டுகளை சாய்த்ததோடு, ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

இந்த வெற்றியினால் பஞ்சாப் அணிக்குப் புள்ளிகள் பட்டியல் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்து கடைசி இடத்தில் நீடிக்கிறது. அதேபோல தோல்வியினால் குஜராத் அணிக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது.

தோனி அணிக்கு மீண்டும் தோல்வி!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 29-ஆவது லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ் அணியைத் தோற்கடித்தது மும்பை இண்டியன்ஸ்.

அதன் கேப்டன் ரோஹித் சர்மா 60 பந்துகளில் 3 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 85 ரன்கள் குவித்தார்.

5-ஆவது வெற்றியைப் பெற்றுள்ள மும்பை அணி, 10 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. புணே அணி, 4 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது.

புள்ளிகள் பட்டியல்

அணிகள்போட்டிகள்வெற்றிதோல்விபுள்ளிகள் நெட் ரன்ரேட்
குஜராத்86212-0.115
மும்பை95410-0.009
டெல்லி6428+0.441
கொல்கத்தா7438+0.322
ஹைதராபாத்7438+0.060
புணே8264+0.130
பெங்களூர்6244+0.065
பஞ்சாப்7254-0.811

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.