லண்டன்: தனது சக நாட்டு வீரரான கிரிஸ்டோபர் கெயின்ஸ் மீதான குற்றச்சாட்டை சர்வதேச கிரிக்கெட் சங்கம் சரியாக கையாளவில்லை என நியூஸிலாந்து கிரிக்கெட் வீரர் மெக்கலம் குற்றம்சாட்டினார்.
லண்டனில் உள்ள கிரிக்கெட்டின் தாயகம் எனப்படும் மெரில்போர்ன் கிரிக்கெட் கிளப்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நியூஸிலாந்தின் அதிரடி கிரிக்கெட் வீரர் பிரண்டன் மெக்கல்லம் பேசியதாவது:
கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது, என சக நாட்டு வீரரும் எனது ஹீரோவுமான கிரிஸ் கெயின்ஸ் ஆட்டத்தை முன்கூட்டியே தீர்மானிப்பது (மேட்ச் பிக்ஸிங்) குறித்து என்னிடம் பேசினார்.
இதுதவிர, நியூஸிலாந்து அணி இங்கிலாந்து சென்ற போது, மீண்டும் என்னிடம் வந்த கெயின்ஸ் ஆட்டத்தை முன்கூட்டியை தீர்மானிப்பது குறித்து பேசினார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு எங்களது அணியினருடன் பேசிய சர்வதேச கிரிக்கெட் சங்கத்தின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரி ஜான் ரோட்ஸ், விளையாட்டில் 'பிக்ஸிங்'ல் ஈடுபடுமாறு யாராவது வீரர்களை வற்புறுத்தினால் தயக்கமின்றி தன்னைத் தொடர்புக் கொள்ளலாம் எனக் கூறினார்.
இதையடுத்து கிரிஸ் கெயின்ஸ் என்னைத் தொடர்புக் கொண்டது குறித்து அப்போது எங்கள் அணியின் கேப்டனாக இருந்த டேனியல் வேட்டோரியிடம் கூறினேன். பின்னர் இருவரும் சேர்ந்து ஜான் ரோட்ஸை சந்தித்து கெயின்ஸ் நடவடிக்கைகள் குறித்து கூறினோம்.
அப்போது ஊழல் தடுப்பு பிரிவில் இருந்த ஜான் ரோட்ஸ் எனது குற்றச்சாட்டை தீவிரமாக விசாரிக்கவில்லை. எனது குற்றச்சாட்டு குறித்து மேலோட்டமாக இரு வரிகள் அடங்கிய அறிக்கையில் என்னிடம் கையெழுத்து வாங்கிவிட்டு என்னை அனுப்பிவிட்டார். இது எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. ஒரு சர்வதேச வீரரை, முன்னாள் வீரர் ஒருவர் இருமுறை மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக அணுகிய குற்றச்சாட்டை ஐசிசி வெகு எளிதாக எடுத்துக் கொண்டது.
மேலும், கெய்ன்ஸ் மீது நான் சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஊடகங்களுக்கு கசிந்துவிட்டன. இது சர்வதேச கிரிக்கெட் சங்கம் மீது வீரர்கள் வைத்துள்ள நம்பிக்கையை தகர்த்துவிட்டது.
இனியாவது சர்வதேச கிரிக்கெட் சங்கம், ஊழல் புகார் குறித்த குற்றச்சாட்டுக்களை பதிவு செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.
பின் குறிப்பு: கிரிஸ் கெயின்ஸ் மீது மெக்கல்லம் சுமத்திய குற்றச்சாட்டுகள் குறித்து லண்டனில் கடந்த 2015 ஆம் ஆண்டு 9 மாதம் விசாரணை நடைபெற்றது. இறுதியில், புகாரில் எவ்வித உண்மையும் இல்லை எனக் கூறி அந்த வழக்கிலிருந்து கெயின்ஸ் விடுவிக்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்

அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு

அஸ்ஸாமில் மினி பேருந்து - லாரி மோதிக்கொண்டதில் பிரபல பிஹு நடனக் கலைஞர் பலி, 11 பேர் காயம்

தவறான திசையை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஆம் ஆத்மி: ராகவ் சத்தா
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


