புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

ஹாக்கி: மலேசியாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது இந்தியா

அஸ்லான் ஷா ஹாக்கி போட்டித் தொடரில் இந்திய அணி மலேசியாவை 6-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

News image
Updated On :15 ஏப்ரல் 2016, 3:11 pm

ஈபோ (மலேசியா): அஸ்லான் ஷா ஹாக்கி போட்டித் தொடரில் இந்திய அணி மலேசியாவை 6-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

மலேசியாவின் ஈபோ நகரில் இன்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றதையடுத்து இந்திய அணி இறுதிச் சுற்றில் ஆஸ்திரேலியாவை எதிர்க்கொள்கிறது.

இன்று மலேசியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியினர் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தினர். முதல் ஐந்து நிமிஷங்களில் கோல் அடிப்பதற்கு கிடைத்த 5 வாய்ப்புகளில் ஒன்றே மட்டுமே இந்திய அணியினர் கோலாக்கினர். இந்திய அணியினர் மலேசிய அணிக்கு வாய்ப்பே அளிக்கவில்லை.

இந்தியாவின் சார்பில் எஸ்வி.சுனில் (2-வது நிமிஷம்), ஹர்ஜித் சிங் (7-வது நிமிஷம்), ராமன்தீப் சிங் (25 மற்றும் 29), தினேஷ் முஸ்தபா (27), தல்வீர் சிங் (50) ஆகியோர் கோல் அடித்தனர். மலேசியா சார்பில் ஷஹாரில் ஷபா ஒரு கோல் அடித்தார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய 12 புள்ளிகள் எடுத்து பட்டியிலில் இரண்டாம் இடம் பிடித்தது.

முன்னதாக நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 3-0 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தியது. இதன் மூலம் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 18 புள்ளிகள் எடுத்து முதலிடம் பெற்றது.

நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பேட்டியில் இந்திய அணி, தென் கொரியாவுடன் இணைந்து சாம்பியன் பட்டம் பெற்றது. கன மழை காரணமாக அப்போது இறுதிப் போட்டி நடைபெறவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.