பெங்களூரூவில் சனிக்கிழமை தொடங்கவிருக்கும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில், பஞ்சாபின் ஆல்ரவுண்டர் குர்கீரத் சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் குர்கீரத் சிங் சேர்க்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரூவில் சனிக்கிழமை தொடங்கும் போட்டிக்கு முன்னதாக அவர் அணியினருடன் இணைந்து கொள்வார்.
பஞ்சாபை சேர்ந்த 25-வயது ஆல்ரவுண்டரான குர்கீரத் சிங், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். எனினும், அவருக்கு விளையாடும் 11 பேர் பட்டியலில் இடம் கிடைக்கவில்லை.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. மொகாலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலையில் உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்களூரூ சின்னசாமி மைதானத்தில் சனிக்கிழமை தொடங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

வாக்குப்பதிவில் புதிய வரலாறு! தமிழக வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் 'சல்யூட்'!

மேற்கு வங்கம்: மாலை 6 மணி வரை 91.74% வாக்குகள் பதிவு!

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


