டெல்லி ரஞ்சி அணியிலிருந்து விலக முடிவெடுத்துள்ளார் பிரபல கிரிக்கெட் வீரரான வீரேந்திர சேவாக்.
1997-98 முதல் டெல்லி அணிக்காக ரஞ்சி மற்றும் இதர உள்ளூர்ப் போட்டிகளில் ஆடிவருகிறார் சேவாக். இப்போது 17 வருடங்கள் கழித்து டெல்லி அணியை விட்டு விலக முடிவெடுத்துள்ளார்.
சென்ற வருட ரஞ்சிப் போட்டியில் சேவாக் நன்றாகவே ஆடினார். எட்டுப் போட்டிகளில் 568 ரன்கள் எடுத்தார். சமீபகாலமாக டெல்லி கிரிக்கெட் நிர்வாகத்தோடு அவ்வப்போது முட்டிக்கொள்ளும் சேவாக், இப்போது தன் அணியில் உள்ள இளைஞர்களின் நலனுக்காக வேறு மாநில அணிக்குச் செல்ல முடிவெடுத்துள்ளார்.
தான் மட்டுமில்லாமல் கம்பீர், ரஜத் பாட்டியா ஆகிய அனுபவம் மிக்க வீரர்கள் அணியில் உள்ளதால் இளம் வீரர்களுக்குத் தகுந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்று அவர் எண்ணுகிறார். இதனால் புதிய அணியில் சேர்ந்து அடுத்த ரஞ்சிப் போட்டியை எதிர்கொள்ள அவர் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சேவாக்கைத் தங்கள் அணியில் சேர்க்க சில மாநிலங்கள் ஆர்வம் காட்டியுள்ளதாகவும் தெரிகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வமான தகவல்கள் வெளிவரக்கூடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.40% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு

"ஆடிப்பாடி அல்ல...! அறிவைப் பயன்படுத்தி வாக்களியுங்கள்!" இயக்குநர் மாரி செல்வராஜ்

தமிழ்நாட்டில் 84.51% வாக்குப்பதிவு! 6 மணி நிலவரம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


