இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையிலான ஒரே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஃபதுல்லா மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்திய அணி முதலில் பேட் செய்தது. ஷிகர் தவன் அபாரமாக ஆடி சதம் அடித்தார்.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஆரம்பம் முதல் அதிரடியாக ஆடினார் தொடக்க வீரர் ஷிகர் தவன். 47 பந்துகளில் 10 பவுண்டரிகளின் உதவியுடன் அரை சதம் அடித்தார்.
இந்திய அணி 23.3 ஓவர்களில் 107 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது தவன் 74, விஜய் 33 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
பின்னர் ஆட்டம் தொடங்கியபோது தவன் தன் அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தார். முரளி விஜய், 98 பந்துகளில் அரை சதம் எடுத்தார். ஷிகர் தவன் 101 பந்துகளில் சதம் அடித்தார். அதில் 16 பவுண்டரிகள் அடங்கும். இது அவருடைய 3-வது சதமாகும். இந்திய அணி 44 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 205 ரன்கள் எடுத்துள்ளது. முதல் விக்கெட்டுக்கு விஜய் - தவன் கூட்டணியின் 2-வது இரட்டைச் சதம் இதுவாகும்.
போதிய வெளிச்சம் இல்லாததால் முதல்நாள் ஆட்டம் 56 ஓவர்களில் முடிவடைந்தது. இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 239 ரன்கள் எடுத்தது. ஷிகர் தவன் 150 ரன்கள், முரளி விஜய் 89 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த 10 இந்திய கப்பல்கள்! - மத்திய அரசு அறிவிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


