சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சார்பில் புதிதாக உருவாக்கப்பட்ட ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ளார்கள். இவர்கள் கிரிக்கெட் வாரியத்துக்கு ஆலோசனை வழங்குவதுடன், இந்திய அணி எதிர்காலத்தில் சந்திக்க இருக்கும் சவால்களுக்கு தீர்வு காணவும் உறுதுணையாக இருப்பார்கள்.
வெளிநாட்டுத் தொடர்களில் சாதிப்பதற்கான வழிமுறைகளை வழங்குவது, திறமைகளைக் கண்டறிவது, சர்வதேச கிரிக்கெட்டுக்குத் தயாராகும் விதமாக உள்ளூர் கிரிக்கெட் வீரர்களைத் தயார்படுத்துவது ஆகியவை இவர்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்று பிசிசிஐ விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
ஆலோசனைக் குழு தொடர்பான செய்தி வெளியானவுடன் இந்தக் குழுவில் ஏன் ராகுல் டிராவிட் இடம்பெறவில்லை எனகிற கேள்வி உருவானது. ராகுல் டிராவிட் மறுத்ததால் தான் வாய்ப்பு லட்சுமணுக்கு வழங்கப்பட்டது என்பதால் எதனால் ராகுல் டிராவிட் நல்ல வாய்ப்பை மறுத்தார் என்கிற சந்தேகமும் உருவானது.
இப்போது அதற்கான விடை கிடைத்துள்ளது. ஆங்கில நாளிதழுக்கு ஒன்றுக்கு பிசிசிஐ அதிகாரி கூறிய தகவலின்படி, ஆலோசனைக் குழுவில் கங்குலி இடம்பெற்றுள்ளதை டிராவிட் விரும்பவில்லை. அவருடன் இணைந்து பணிபுரியமுடியாததால் பிசிசிஐயின் கோரிக்கையை ஏற்க டிராவிட் மறுத்துவிட்டாராம். மற்றொரு அதிகாரி இதுபற்றி கூறும்போது, டிராவிட் போன்ற ஒரு கிரிக்கெட் வீரர், ஈகோ யுத்தத்தில் ஈடுபட விரும்பமாட்டார் என்பதால் ஆலோசனைக் குழுவில் இடம்பெறவில்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!

மேற்கு வங்கத்தில் யாராலும் ஊடுருவ முடியாது: அமித் ஷா

ஆயுஷ் மாத்ரேவுக்கு மாற்று வீரர் அறிவிப்பு!
ஜனநாயகக் கடமையில் அரசியல் தலைவர்கள்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


