இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கியுள்ளதாக பால் வான் ஆஸ் தெரிவித்துள்ளார்.
ஹிமாசலப் பிரதேசத்தில் இந்திய ஹாக்கி அணி பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இதில் பால் வான் ஆஸ் கலந்துகொள்ளவில்லை. இதனால் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட உள்ளதாகக் கருதப்பட்டது. கடந்த ஜனவரிம் மாதம் தான் அவர் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
பெல்ஜியத்தில் நடந்த ஹாக்கி வேர்ல்ட் லீக் போட்டியில் இந்திய அணி அரையிறுதியில் தோல்வி அடைந்தது. இது பற்றி அறிக்கை தராததால், பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுபற்றி பால் வான் ஆஸ் கூறும்போது, ‘என்னைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கியுள்ளார்கள். ஹாக்கி இந்தியாவின் செயல்திறன் இயக்குநர் ரோலண்ட் ஓல்ட்மன்ஸ், மின்னஞ்சல் வழியாக இத்தகவலைத் தெரிவித்துள்ளார். ஆனால் இதுதொடர்பாக ஹாக்கி இந்தியா அல்லது சாய் அமைப்பிடமிருந்தோ (Sports Authority of India) எந்தத் தகவலும் வரவில்லை. விரைவில் என் நீக்கம் தொடர்பாக அறிவிப்பு வெளியிடுவார்கள்’ என்று தெரிவித்தார்.
ஹாக்கி வேர்ல்ட் லீக் போட்டியின் காலிறுதி ஆட்டத்தின்போது, பால் வான் ஆஸுக்கும் ஹாக்கி இந்தியா தலைவர் நரிந்தர் பத்ராவுக்கும் இடையே மோதல் நிகழ்ந்தது. போட்டி முடிந்தபிறகு நரிந்தர், ஆட்டக் களத்துக்குள் நுழைந்து வீரர்களிடம் உரையாடினார். இதனை விரும்பாத பால் வான் ஆஸ், நரிந்தரைக் களத்தை விட்டு வெளியே போகுமாறு கூறினார். இதனால் ஹாக்கி இந்தியா தலைவர் நரிந்தர், பால் வான் ஆஸ் மீது அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு இன்னும் ஒருவருடமே உள்ள நிலையில் இந்திய ஹாக்கியில் இதுபோன்ற ஒரு சர்ச்சை ஏற்பட்டிருப்பது ஹாக்கி ரசிகர்களை வருத்தப்பட வைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெளிநாடுகளிலிருந்து வந்த வாக்காளா்கள்

அடிப்படை வசதிகள் இல்லாத வாக்குச்சாவடி: வாக்காளா்கள் அதிருப்தி

துத்துக்குடியில் முதல்முறை வாக்காளா்கள் உற்சாகம்

தூத்துக்குடியில் மணக்கோலத்தில் வந்து வாக்களித்த மணமக்கள்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


