டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் நீக்கப்படவில்லை: நரிந்தர் பத்ரா விளக்கம்

பயிற்சியாளர் நீக்கப்படவில்லை. அவரிடமிருந்து எங்களுக்கு எந்தத் தகவலும் இல்லை....

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:01 am

எழில்

இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கியுள்ளதாக பால் வான் ஆஸ் தெரிவித்துள்ள நிலையில், இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் நீக்கப்படவில்லை என ஹாக்கி இந்தியா அமைப்பின் தலைவர் நரிந்தர் பத்ரா விளக்கம் அளித்துள்ளார்.

பெல்ஜியத்தில் நடந்த ஹாக்கி வேர்ல்ட் லீக் போட்டியில் இந்திய அணி அரையிறுதியில் தோல்வி அடைந்தது. இது பற்றி அறிக்கை தராததால், பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து பால் வான் ஆஸ் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. தன்னைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக பால் வான் ஆஸும் இன்று பேட்டியளித்தார்.

இதுபற்றி அவர் கூறும்போது, ‘என்னைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கியுள்ளார்கள். ஹாக்கி இந்தியாவின் செயல்திறன் இயக்குநர் ரோலண்ட் ஓல்ட்மன்ஸ், மின்னஞ்சல் வழியாக இத்தகவலைத் தெரிவித்துள்ளார். ஆனால் இதுதொடர்பாக ஹாக்கி இந்தியா அல்லது சாய் அமைப்பிடமிருந்தோ (Sports Authority of India) எந்தத் தகவலும் வரவில்லை. விரைவில் என் நீக்கம் தொடர்பாக அறிவிப்பு வெளியிடுவார்கள்’ என்றார்.

ஹாக்கி வேர்ல்ட் லீக் போட்டியின் காலிறுதி ஆட்டத்தின்போது, பால் வான் ஆஸுக்கும்  ஹாக்கி இந்தியா தலைவர் நரிந்தர் பத்ராவுக்கும் இடையே மோதல் நிகழ்ந்தது. போட்டி முடிந்தபிறகு நரிந்தர், ஆட்டக் களத்துக்குள் நுழைந்து வீரர்களிடம் உரையாடினார். இதனை விரும்பாத பால் வான் ஆஸ், நரிந்தரைக் களத்தை விட்டு வெளியே போகுமாறு கூறினார். இதனால் ஹாக்கி இந்தியா தலைவர் நரிந்தர், பால் வான் ஆஸ் மீது அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், பயிற்சியாளர் நீக்கம் குறித்த செய்தியை மறுக்கிறார் ஹாக்கி இந்தியாவின் தலைவர் நரிந்தர் பத்ரா. இதுபற்றி அவர் கூறும்போது, பால் வான் ஆஸை யாரும் நீக்கவில்லை. ஹாக்கி வேர்ல்ட் லீக் போட்டி தொடர்பான அறிக்கையை அவர் ஜூலை 15-ம் தேதி அளித்திருக்கவேண்டும். 17-ம் தேதி இந்திய அணியின் பயிற்சிக்குத் திரும்பியிருக்கவேண்டும். இது எதையும் அவர் செய்யவில்லை. அவரிடமிருந்து எங்களுக்கு எந்தத் தகவலும் இல்லை என்றார்.

பத்ராவின் பதிலால் பயிற்சியாளர் நீக்கம் குறித்த சர்ச்சை மேலும் நீடிக்கிறது என்றே கூறமுடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.