அடுத்த ஆண்டு ரியோடி ஜெனிரோ நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின் மல்யுத்த போட்டிக்கான நடுவர் குழுவில் இந்தியாவைச் சேர்ந்த அசோக் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய நடுவர் ஒருவர் மல்யுத்த போட்டியின் நடுவராகப் பணியாற்ற இருப்பது இதுவே முதல் முறையாகும்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் பணியாற்றுவதற்காக நடுவர்கள், கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 50 பேரை சர்வதேச மல்யுத்த கூட்டமைப்பு தேர்வு செய்துள்ளது. லாஸ் வேகாஸ் நகரில் செப்டம்பர் மாதம் நடைபெற்ற உலக மூத்த மல்யுத்த வாகையர் World Senior Wrestling Championship) போட்டியில் பணியாற்றியதன் அடிப்படையில் அவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
ஆசிய கண்டத்திலிருந்து 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே நடுவர் அசோக் குமார் மட்டுமே.
இந்திய விமானப் படையில் பணியாற்றி வரும் அசோக் குமார் இதுவரை 50க்கும் அதிகமான சர்வதேச போட்டித் தொடர்களில் நடுவராகப் பணியாற்றியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுரை மாவட்டத்தில் 5 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள்!
ஐ.நா. அவைத் தலைவர் அனலேனா இந்தியா வருகை!
ஓடிடியில் வெளியானது ஹேப்பி ராஜ்!
இந்தியா - நியூஸிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


