தடைக்குப் பின் இளம் வேகபந்து வீச்சாளர் முகம்மது ஆமிர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சி முகாமுக்கு மீண்டும் அழைக்கப்பட்ட விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த மூத்த வீரர்கள் முகம்மது ஹபீஸ், அஸார் அலி ஆகியோர் சமாதானமடைந்ததாகத் தெரிகிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷகாரியார் கானை சந்தித்த இரு மூத்த வீரர்களும் மீண்டும் பயிற்சி முகாமில் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2005 ஆம் ஆண்டில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றிருந்த வீரர்கள் முகம்மது ஆமிர், சல்மான் பட், முகம்மது ஆசீப் ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி அவர்களுக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. குறிப்பிட்ட ஓவரில், குறிப்பிட்ட பந்தை 'நோ-பால்' ஆக வீசிய விவகாரம் வெளியானதால், அவர்கள் மீது தடை விதிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தண்டனைக் காலம் நிறைவடைந்ததையடுத்து பாகிஸ்தானின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஆமிர், உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதற்கு சர்வதேச கிரிக்கெட் சங்கம் அனுமதி அளித்தது.
இந்நிலையில் பாகிஸ்தானின் லாகூர் நகரில் நடைபெற்று வரும் தேசிய வீரர்களுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்பதற்காக முகம்மது ஆமிர் அழைக்கப்பட்டார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பாகிஸ்தானின் மூத்த வீரர்கள் முகம்மது ஹபீஸ், ஒருநாள் போட்டி கேப்டன் அஸார் அலி ஆகியோர் பயிற்சி முகாமை புறக்கணித்தனர்.
போராட்டம் நடத்திய மூத்த வீரர்களை இன்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகாரியார் கானை சந்தித்து பேசினர்.
''மூத்த வீரர்கள் சுட்டிக்காட்டிய சில குறைகளை கவனமுடன் கேட்டேன். எனினும், அவர்களது சில கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. ஆமிர் விஷயத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முடிவுக்கு வீரர்கள் கட்டுப்பட வேண்டும்'' என அவர் மூத்த வீரர்களிடம் கூறினார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஹபீஸ், பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு கலங்கத்தை ஏற்படுத்தியவர்களை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்றார். எனினும், கிரிக்கெட் வாரியத்தின் முடிவுக்கு கட்டுப்பட்டு, பயிற்சி முகாமில் பங்கேற்கவிருப்பதாக கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுரை மாவட்டத்தில் 5 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள்!
ஐ.நா. அவைத் தலைவர் அனலேனா இந்தியா வருகை!
ஓடிடியில் வெளியானது ஹேப்பி ராஜ்!
இந்தியா - நியூஸிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


