சிங்க்ஃபீல்ட் செஸ்: முதலிடத்துக்கு முன்னேறினார் கார்ல்சன்! ஆனந்த் மீண்டும் டிரா!
1.5 புள்ளிகளுடன் ஆனந்த் கடைசி இடத்தில் உள்ளார்.


அமெரிக்காவில் நடைபெற்று வரும் சிங்க்ஃபீல்ட் கோப்பை செஸ் போட்டியின் 5-வது சுற்றில், ஆனந்தும் மேக்ஸிம் வாசியரும் மோதினார்கள். இந்த ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
சிங்க்ஃபீல்ட் கோப்பை கிராண்ட் செஸ் போட்டி, அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் திங்கள்கிழமை தொடங்கியது. மொத்தம் 9 சுற்றுக்களைக் கொண்ட இந்தப் போட்டியில், உலகத் தர வரிசையில் முன்னணியில் உள்ள 10 செஸ் வீரர்கள் பங்கேற்று வருகின்றனர். முதல் இரண்டு ஆட்டங்களில் தோல்வி அடைந்த ஆனந்த் அதன்பிறகு நடந்த இரு ஆட்டங்களையும் டிரா செய்தார். இந்நிலையில் அவர் 5-வது சுற்றில் பிரான்சை சேர்ந்த மேக்ஸிம் வாசியருடன் மோதினார். இந்த ஆட்டம் 42-வது நகர்த்தலின்போது டிரா ஆனது.
நேற்று நடந்த 5-வது சுற்றில் கார்ல்சன் வெற்றி பெற்றார். டொபலோவ் தோற்றுப் போனார். இதனையடுத்து 3.5 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறினார் கார்ல்சன். அதே புள்ளிகளுடன் அரோனியன் 2-ம் இடத்திலும் 3 புள்ளிகளுடன் டொபலோவ் 3-வது இடத்திலும் உள்ளார்கள். 1.5 புள்ளிகளுடன் ஆனந்த் கடைசி இடத்தில் உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...