என். சீனிவாசன் கலந்துகொண்டதால் பிசிசிஐ செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு!
இதுகுறித்து உச்ச நீதிமன்றத்திடம் கருத்து கேட்கப்படும் என பிசிசிஐ தரப்பில்


பிசிசிஐ செயற்குழுக் கூட்டத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக என். சீனிவாசன் கலந்து கொண்டதால் அந்தக் கூட்டத்தை பிசிசிஐ ஒத்திவைத்துள்ளது.
2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. அது தொடர்பாக விசாரணை நடத்தி முன்னாள் நீதிபதி முத்கல் தலைமையிலான குழு, தனது அறிக்கையை கடந்த ஆண்டு தாக்கல் செய்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில், நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான மூவர் குழு, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளை, ஐபிஎல் போட்டிகளில் இருந்து 2 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டது.
இன்றைய பிசிசிஐ செயற்குழுக் கூட்டத்தில், சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஐபிஎல் செயற்குழு அறிக்கை அளிப்பதாக இருந்தது. இரு அணிகளுக்கும் விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுமா என்பது குறித்து அறிக்கையின் அடிப்படையில் முடிவெடுக்க இருந்தது பிசிசிஐ.
ஆனால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக என். சீனிவாசன் செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டதால் அதற்கு பிசிசிஐ உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனால் செயற்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. சீனிவாசன் கலந்துகொள்வது பற்றி சட்டரீதியான தெளிவு இல்லாததால் இதுகுறித்து உச்ச நீதிமன்றத்திடம் கருத்து கேட்கப்படும் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...