எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

இந்தியா ஏ அபார வெற்றி; அக்‌ஷர் படேல் 6-6-0-4!

அக்‌ஷர் படேல் 6 ஓவர்கள் வீசி 6 மெயிடன்கள் எடுத்தார். அவர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:33 am

சநகன்

இந்திய - தென் ஆப்பிரிக்க ஏ அணிகளுக்கு இடையேயான 2-வது 4 நாள் அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஏ அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா-தென் ஆப்பிரிக்க ஏ அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேரள மாநிலம், வயநாட்டில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில், 260 ரன்களில் சுருண்டது. இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் படேல் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து இந்திய ஏ அணி 8 விக்கெட்டுகளை இழந்து 417 ரன்கள் எடுத்து தனது முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. முகுந்த் 72, ராயுடு 71, அக்‌ஷர் படேல் 69 ரன்கள் எடுத்தார்கள். தென் ஆப்பிரிக்கத் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் பியட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கடைசி நாளான இன்று ஆடிய தெ.ஆ அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல் திணறியது. 31.4 ஓவர்களில் 76 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியா ஏ அணி ஒரு இன்னிங்ஸ் 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய பவுலர் அக்‌ஷர் படேல் 6 ஓவர்கள் வீசி 6 மெயிடன்கள் எடுத்தார். அவர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

2 போட்டி கொண்ட இந்தத் தொடரை இந்தியா ஏ அணி 1-0 என வெற்றி பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.