இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியுடன் இலங்கை அணி வீரர் சங்ககாரா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
2-வது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்ற பிறகு, சங்ககாராவுக்குப் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. சுனில் கவாஸ்கர் அவரை மிகவும் பாராட்டி பேசினார். இந்திய வீரர்கள் தங்கள் டெஸ்ட் உடையில் கையெழுத்திட்டு சங்ககாராவுக்குப் பரிசளித்தார்கள்.
பிறகு மிகவும் உணர்வுபூர்வமாக சங்ககாரா பேசியதாவது:
நான் நிறைய பேருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். என்னுடைய அனைத்து முன்னாள் கேப்டன்கள், என்னுடன் விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் நன்றி. நீங்கள் எனக்கு அளித்த ஆதரவும் ஊக்கமும் என்னை மிகவும் ஊக்கப்படுத்தியது.
நிறைய பேர் என்னிடம் எனக்கு தூண்டுகோலாக அமைந்தது எது என்று கேட்கிறார்கள். எனது பெற்றோர். மன்னிக்கவும், நான் உங்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதற்காக கூறவில்லை. நீங்கள்தான் எனது தூண்டுகோல். நான் வீட்டில் பாதுகாப்பாக உணர்ந்தேன். நாம் நம் குடும்பத்தை தேர்ந்தெடுக்க முடியாது என்று கூறுவார்கள், ஆனால் நான் உங்கள் குழந்தையாக பிறந்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் எப்போதும் உணர்ச்சிவசப்பட மாட்டேன். ஆனால் எனது பெற்றோரும் உறவினர்களும் உள்ள இந்தத் தருணம் மிகவும் அரிய தருணம் ஆகும்.

எனது பெரிய சாதனைகள் பற்றி கேட்கிறார்கள். சதங்கள், உலகக் கோப்பை வெற்றி. இதைத் தாண்டி நான் பார்ப்பது, கடந்த 30 ஆண்டுகளில் நான் பெற்ற நண்பர்களை. அவர்கள் இந்தத் திங்கள் கிழமை அன்று நான் ஆடுவதைப் பார்க்க வந்துள்ளார்கள். நான் வென்றாலும் தோற்றாலும் என்னை எப்போதும் நேசிக்கும் குடும்பம். இது என் பெரிய சாதனை.
இறுதியாக விராட் மற்றும் இந்திய அணியினர் அளித்த அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. நான் ஓய்வு பெறும் தருணத்தில் கடினமான டெஸ்ட் போட்டியையே விரும்பினேன். அதனை இந்திய அணி எனக்கு அளித்ததைப் பெரிதாக நினைக்கிறேன். நீங்கள் எப்போதும் எங்களுடைய கடினமான எதிரணியினராக இருந்துள்ளீர்கள்.
கடைசியாக மேத்யூஸ் மற்றும் என் அணியினருக்கு. மேத்யூஸ் உங்களிடம் அருமையான அணி உள்ளது, அருமையான எதிர்காலம் உள்ளது. பயமில்லாமல் விளையாடுங்கள். வெற்றிக்காக ஆடும்போது தோற்பதைப் பற்றி கவலைப்படவேண்டாம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வார பலன்கள் (ஏப். 24 - 30) - மேஷம்

என்ன, கரூர் சென்று செந்தில் பாலாஜி வாக்களிக்கவில்லையா? ஏன்??

வார பலன்கள் (ஏப். 24 - 30) மேஷம் - மீனம்! பதவி உயர்வு யாருக்கு?

தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் நெஞ்சுவலியால் மரணம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

