எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

2-வது டெஸ்ட்: இலங்கை அணி 130/9; அஸ்வின் 5 விக்கெட்டுகள்!

சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:31 am

சநகன்

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது. அஸ்வின் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்தியா - இலங்கை இடையிலான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் கடந்த 20-ஆம் தேதி தொடங்கியது. இதன் முதல் இன்னிங்ஸில் இந்தியா 393 ரன்களும், இலங்கை 306 ரன்களும் எடுத்தன. 2-வது இன்னிங்ஸில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. இதையடுத்து இலங்கை அணிக்கு 413 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 4-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 21 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்தது.  கருணரத்னே 25 ரன்களுடனும், மேத்யூஸ் 23 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

5-வது நாளான இன்று, இந்திய அணி வீரர்கள் மிகுந்த துடிப்புடன் விளையாடினார்கள். முதல் பந்திலேயே மேத்யூஸின் விக்கெட்டைக் கைப்பற்றினார் உமேஷ் யாதவ். அதன்பிறகு இலங்கை அணியின் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன. சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மிஸ்ரா 2 விக்கெட்டுகளையும் யாதவ், இஷாந்த் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.

ஒரு விக்கெட் எடுத்தால் அபார வெற்றி என்கிற நிலையில் மழை குறுக்கிட்டது. உணவு இடைவேளையின்போது, இலங்கை அணி தனது 2-வது இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.