எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

2-வது டெஸ்ட்: லோகேஷ் ராகுல் அபார சதம்!

மிகச் சிறப்பாக ஆடிய கோலி, 78 ரன்களில் ஹெராத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:30 am

சநகன்

இந்தியா - இலங்கை இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்க வீரர் ராகுல் சதம் அடித்து இந்திய அணிக்கு வலுவான தொடக்கத்தைக் கொடுத்துள்ளார்.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. காலேவில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்திய போதிலும், துரதிர்ஷ்டவசமாக 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில், ஷிகர் தவன், ஹர்பஜன் சிங், வருண் ஆரோனுக்குப் பதிலாக முரளி விஜய், பின்னி, உமேஷ் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த இந்திய அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. முரளி விஜய் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். 3-வதாக களமிறங்கிய ரஹானே 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 12 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி.

அதன்பிறகு ஆடிய ராகுலும் கோலியும் பொறுப்புடன் ஆடினார்கள். கோலி சற்று அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தார். இதனால் இந்த ஜோடி 21.3 ஓவர்களில் 85 ரன்களை எடுத்தது. உணவு இடைவேளையின்போது இந்திய அணி 26 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 97 ரன்களை எடுத்துள்ளது. கோலி 48, ராகுல் 39 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

மிகச் சிறப்பாக ஆடிய கோலி, 78 ரன்களில் ஹெராத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ராகுலும் கோலியும் 3-வது விக்கெட்டுக்கு 164 ரன்கள் சேர்த்தார்கள். லோகேஷ் ராகுல் மிகவும் பொறுப்புடன் ஆடி 180 பந்துகளில் சதமடித்தார். பிறகு அவர் 108 ரன்களில் பவுன்சர் பந்தால் அவுட் ஆனார். 6-வதாக ஆடவந்த பின்னியால் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அவர் 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.

*

இலங்கை அணியின் மூத்த வீரர் குமார் சங்ககாராவுக்கு இது கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி. தனது 134-ஆவது டெஸ்ட் போட்டியுடன் அவர் விடைபெறுகிறார். அவருக்கு இன்று பிசிசிஐ சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.