எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

புலிகள் பாதுகாப்பு பிரசாரம்: சச்சினின் ஃப்ளாஷ்பேக்!

இந்தச் சதத்தை புலிகள் பாதுகாப்புக்கு அர்ப்பணிக்கிறேன். இதுதான் அணியின் விருப்பமும்கூட.

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:28 am

சநகன்

மஹாராஷ்டிர அரசு, புலிகள் பாதுகாப்பு பிரசாரத் தூதரராக தன்னை நியமிக்க சச்சின் டெண்டுல்கர் ஒப்புதல் அளித்துள்ளார். தான் ஏற்கெனவே ஒரு சதத்தை புலிகள் பாதுகாப்புக்காக அர்ப்பணித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலக புலிகள் தினத்தையொட்டி கடந்த ஜூலை 29-ம் தேதி, அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கு மஹாராஷ்டிர நிதி மற்றும் வனத்துறை அமைச்சர் சுதிர் முங்கந்திவார் கடிதம் எழுதினார். அதில் புலிகளைக் காப்பதற்காக மாநில அரசு ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளதாகவும் அதற்கான தூதராக நியமிக்க சம்மதம் அளிக்கும்படியும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதை அமிதாப் பச்சன் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் சச்சினும் ஒப்புதல் அளித்துள்ளார். இதுதொடர்பாக சச்சின் சுதிருக்கு எழுதிய கடிதத்தில் ‘புலிகளைப் பாதுகாக்கும் திட்டத்துக்கு என் பாராட்டுகள். இதுதொடர்பாக விவாதிக்க ஆர்வமாக உள்ளேன். கிரிக்கெட் டெஸ்ட் மேட்ச் ஒன்றில் செஞ்சுரி அடித்தபோது, அதனை புலிகளின் பாதுகாப்புக்காக அர்ப்பணித்தேன். புலிகளைக் காக்கும் இயக்கத்தின் தூதராக நான் என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும்?’ என்று சச்சின் கடிதம் எழுதியுள்ளார். 

2009 ஹாமில்டன் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக சதம் அடித்தார் சச்சின். தனது 42-வது டெஸ்ட் சதத்தை புலிகள் பாதுகாப்புக்காக அர்ப்பணித்தார்.

அப்போது சச்சின் பேசியபோது இவ்வாறு கூறினார்.

‘இந்தச் சதத்தை புலிகள் பாதுகாப்புக்கு அர்ப்பணிக்கிறேன். இதுதான் அணியின் விருப்பமும்கூட. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் 40,000 புலிகள் இருந்தன. இப்போது 1700 புலிகள் மட்டும்தான் உள்ளன. ஒவ்வொரு மாதமும் ஒரு புலியை நாம் இழந்து வருகிறோம். இது மிகவும் ஆபத்தானது. டைனோசர் என்றொரு மிருகம் இருந்ததாக சிறிய வயதில் என்னிடம் சொல்லப்பட்டது. அடுத்தத் தலைமுறையினரிடம் புலியைப் பற்றியும் இதுபோல கூறும் நிலை வரலாம். ஏதாவது செய்து இந்த நிலையை மாற்றவேண்டும். காட்டில் புலிகள் எந்தத் தொந்தரவும் இல்லாமல் வாழ அனுமதிக்கப்படவேண்டும். நமக்கென்று ஒரு பகுதி இருப்பதுபோல புலிகளுக்கு காடு உள்ளது. அதை நாம் சொந்தரவு செய்யக்கூடாது என்றார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.