தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

இலங்கை தொடர்: பயிற்சி ஆட்டம் டிரா!

இந்தியாவின் அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Updated On :8 ஆகஸ்ட் 2015, 12:19 pm

இந்தியா - இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவரின் லெவன் அணிகளிடையிலான 3 நாள்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் டிராவில் முடிவடைந்துள்ளது.

இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 351 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதன்பிறகு ஆடிய இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணி, இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சில் தாக்குப்பிடிக்க முடியாமல் நிலைகுலைந்தது. 31 ஓவர்களில் 121 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

பின்னர், தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணி, 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் 40 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்து 342 ரன்கள் முன்னிலை பெற்றது. புஜாரா 31, ராகுல் 47 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

இன்று தனது ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில், 58.4 ஓவர்களில் 180 ரன்கள் எடுத்து  ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ராகுல் 47 ரன்கள் எடுத்தார்.

411 ரன்கள் இலக்குடன் 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவரின் லெவன் அணி, ஆட்ட நேர முடிவில், 54 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களை எடுத்தது. இதனால் இந்தப் போட்டி டிரா ஆனது. இலங்கை அணியின் சில்வா 83 ரன்கள் எடுத்தார். இந்தியாவின் அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அகஸ்ட் 12-ம் தேதி முதல் டெஸ்ட் தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.