சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இன்று இந்திய - ஆஸ்திரேலிய ஏ அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலியா ஏ அணி, 119 ரன்கள் வித்தியாசத்தில் அமர்க்களமாக வெற்றி பெற்றது.
இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 3 நாடுகள் பங்கேற்றுள்ள "ஏ' அணிகளிடையிலான முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் சென்னையில் நடைபெற்று வருகிறது. 4 நாள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் ஏற்கெனவே இந்திய ஏ அணியைத் தோற்கடித்த ஆஸ்திரேலிய ஏ அணி, முதல் ஒரு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க ஏ அணியையும் சாய்த்து அபாரமாக செயல்பட்டு வருகிறது.
டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தழுவினாலும் ஒரு நாள் தொடரில் ஆதிக்கத்தை நிலைநாட்டும் முனைப்பில் ராகுல் திராவிட்டிடம் பயிற்சி எடுத்துவரும் இந்திய ஏ அணி உள்ளது. எனவே இந்தப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், போட்டி ஆரம்பித்தது முதல் ஆஸ்திரேலியா ஏ அணியே ஆதிக்கம் செலுத்தியது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஏ அணி, பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது.
தொடக்க ஆட்டக்காரர்களான களமிறங்கிய உஸ்மான் கவாஜாவும் பர்ன்ஸும் அதிரடியாக ஆடினார்கள். இருவரும் சதம் அடித்தார்கள். 36-வது ஓவரின்போதுதான் இந்தக் கூட்டணியைப் பிரிக்கமுடிந்தது. கவாஜா 100, பர்ன்ஸ், 154 ரன்கள் எடுத்தார்கள். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 334 ரன்களைக் குவித்தது ஆஸ்திரேலியா ஏ அணி.
கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய பேட்ஸ்மேன்களா, ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல் திணறினார்கள். 42.3 ஓவர்களில் 215 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா ஏ அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கெங்கவல்லி அருகே தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மரணம்

முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகளில் வாக்கு சதவீதம் எவ்வளவு?

கோவை கணியூரில் வாக்களித்தவர்களுக்கு மரக்கன்றுகள்: மக்களிடையே பெரும் வரவேற்பு!

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


