இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவரின் லெவன் அணியுடனான பயிற்சி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாளில் இந்திய அணி 342 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இலங்கையுடன் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி அந்நாட்டுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 12-ஆம் தேதி காலேவில் தொடங்குகிறது.
இதற்கு முன்னோட்டமாக இந்தியா - இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவரின் லெவன் அணிகளிடையிலான 3 நாள் கொண்ட பயிற்சி டெஸ்ட் போட்டி கொழும்புவில் வியாழக்கிழமை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற எதிரணியின் கேப்டன் லஹிரு திரிமானி இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அபாரமாக ஆடிய ரஹானே சதம் விளாசினார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 79 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்தது.
இரண்டாம் நாளான இன்று, தொடர்ந்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 351 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இலங்கை அணி பந்துவீச்சாளர் ரஜிதா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதன்பிறகு ஆடிய இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணி, இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சில் தாக்குப்பிடிக்க முடியாமல் நிலைகுலைந்தது. முதல் 10 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்தது. இந்த 5 விக்கெட்களையும் இஷாந்த் சர்மா கைப்பற்றினார். இறுதியில், 31 ஓவர்களில் 121 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இஷாந்த் 5, அஸ்வின் 2, ஆரோன் 2, ஹர்பஜன் 1 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்கள்.
பின்னர், தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணி, ஆட்டநேர முடிவில் 40 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்து 342 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. புஜாரா 31, ராகுல் 47 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கெங்கவல்லி அருகே தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மரணம்

முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகளில் வாக்கு சதவீதம் எவ்வளவு?

கோவை கணியூரில் வாக்களித்தவர்களுக்கு மரக்கன்றுகள்: மக்களிடையே பெரும் வரவேற்பு!

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

