இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. 4-வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 331 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் இந்தத் தொடரை கைப்பற்றிவிடலாம் என்ற முனைப்பில் வியாழக்கிழமை தொடங்கிய 4-ஆவது போட்டியை இங்கிலாந்து எதிர்கொண்டது.
டாஸ் வென்ற அந்த அணியின் கேப்டன் அலஸ்டர் குக் எதிரணியை முதலில் பேட்டிங் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். யாரும் எதிர்பாராத விதத்தில் முதல் இன்னிங்ஸில் ஸ்டூவர்ட் பிராட் பந்துவீச்சில் ஆட்டம் கண்ட ஆஸ்திரேலியா 60 ரன்களில் சுருண்டது. 18.3 ஓவர்களில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன் பின்னர் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் ஆடம் லைத் 14 ரன்களிலும், இயான் பெல் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் குக் 43 ரன்கள் சேர்த்து வெளியேறினார். இவர்கள் 3 பேரும் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். இதன் பின்னர் ஜோ ரூட் - ஜானி பேர்ஸ்டோ விக்கெட் சரிவை தடுத்து பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
முதல்நாள் முடிவில், 65 ஓவர்களில், இங்கிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்திருந்தது.
இரண்டாவது நாளான இன்றும் தனது ஆதிக்கத்தை இங்கிலாந்து அணி தொடர்ந்தது. ரூட் அபாரமாக ஆடி 130 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியாக 85.2 ஓவர்களில் 391 ரன்கள் எடுத்திருந்தபோது தனது முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது இங்கிலாந்து. இதனால் அந்த அணி 331 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் 6 விக்கெட்டுகள் எடுத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கெங்கவல்லி அருகே தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மரணம்

முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகளில் வாக்கு சதவீதம் எவ்வளவு?

கோவை கணியூரில் வாக்களித்தவர்களுக்கு மரக்கன்றுகள்: மக்களிடையே பெரும் வரவேற்பு!

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

