தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஆஷஸ்: ஆஸ்திரேலியா 60 ரன்களுக்கு ஆல்அவுட்!

9.3 ஓவர்கள் வீசி 15 ரன்கள் மட்டும் கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார் பிராட்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2015, 12:14 pm

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையே நடக்கும் நான்காவது ஆஷஸ் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 60 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது ஆஸ்திரேலிய அணி.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான பாரம்பரிய ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் 4-ஆவது டெஸ்ட் போட்டி, இங்கிலாந்தின் நாட்டிங்ஹாமில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, ஃபீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தது.

முதல் ஓவரிலேயே ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. ரோஜர்ஸ், ஸ்மித் விக்கெட்டுகளை முதல் ஓவரிலேயே வீழ்த்தி இங்கிலாந்து அணிக்கு அட்டகாசமான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார் வேகப்பந்து வீச்சாளர் பிராட். அதன்பிறகும், ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

முதல் நான்கு பேட்ஸ்மேன்களில் 3 பேர் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார்கள். இறுதியில் தனது முதல் இன்னிங்ஸில், 18.3 ஓவர்களில், 60 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஆஸ்திரேலிய அணி. அதிகபட்சமாக ஜான்ஸன் 13, கிளார்க் 10 ரன்கள் எடுத்தார்கள். இது தவிர இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் உதிரியாக 14 ரன்களைக் கொடுத்தனர். 9.3 ஓவர்கள் வீசி 15 ரன்கள் மட்டும் கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார் பிராட். முதல் விக்கெட்டை எடுத்தபோது அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 300-வது விக்கெட்டைப் பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.