திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

சென்னை போட்டி: ஆஸ்திரேலியா ஏ அணி அபார வெற்றி!

இதன்பிறகு 61 ரன்கள் என்கிற எளிதான வெற்றி இலக்குடன் ஆடத் தொடங்கியது ஆஸ்திரேலியா ஏ அணி.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:17 am

சநகன்

இந்தியா ஏ அணிக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா ஏ அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையிலான அதிகாரபூர்வமற்ற 4 நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் கடந்த புதன்கிழமை தொடங்கியது. இதன் முதல் இன்னிங்ஸில் இந்தியா ஏ அணி 135 ரன்களும், ஆஸ்திரேலியா ஏ அணி 349 ரன்களும் எடுத்தன. இதையடுத்து 2-ஆவது இன்னிங்ஸில் விளையாடிய இந்தியா ஏ அணி 3-ம் நாள் ஆட்டநேர முடிவில், 83 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்தது. 53 ரன்கள் முன்னிலை பெற்றது.

இந்நிலையில் 4-ம் நாளான இன்று ஆட்டத்தைத் தொடங்கிய இந்தியா ஏ அணி, 274 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. சாந்து, ஓ'கீஃபி ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் எடுத்தார்கள்.

இதன்பிறகு 61 ரன்கள் என்கிற எளிதான வெற்றி இலக்குடன் ஆடத் தொடங்கியது ஆஸ்திரேலியா ஏ அணி. அதன் தொடக்க வீரர்கள் அதிரடியாக ஆடினார்கள். 6.1 ஓவர்களில் 62 ரன்களை எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா ஏ அணி. 

இதனால் 2 போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலியா ஏ அணி வெற்றி பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.