கோவை, ஜூன் 14: கோவையில் நடைபெற்ற மாநில ஜூனியர் செஸ் போட்டியில் கோவை வீரர் ஜா.கிரிமேன், சென்னை வீராங்கனை ஏ.அக்ஷயா ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.
கோவை மாவட்ட செஸ் சங்கம் சார்பில் சன்மார்க்க சங்கத்தில் இப்போட்டி கடந்த ஒரு வாரமாக நடைபெற்றது. மாநிலம் முழுவதிலும் இருந்து ஆடவர் பிரிவில் 98 பேரும், மகளிர் பிரிவில் 40 பேரும் பங்கேற்றனர். இப்போட்டியின் ஆடவர் பிரிவில் முதல்நிலை வீரராக களம் கண்ட கோவை வீரர் ஜா.கிரிமேன், ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடினார். வியாழக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில் கோவை வீரர் ஆர். கணேஷை தோற்கடித்த கிரிமேன் 9 புள்ளிகளுடன் சாம்பியன் ஆனார்.
கன்னியாகுமரியின் ஜே.நிஷ்வின், புளூம் செஸ் அகாதெமியின் எஸ்.ஆனந்தராஜைத் தோற்கடித்து 8.5 புள்ளிகளுடன் 2-வது இடத்தைப் பிடித்தார். காஞ்சிபுரத்தின் எஸ்.பிரசன்னா, சென்னை வீரர் ஒசாமா சலீமுடன் டிரா செய்து 8 புள்ளிகளுடன் 3-வது இடத்தைப் பிடித்தார். சென்னை வீரர் எஸ்.ஜஸ்வந்த், சக ஊரைச் சேர்ந்தவரான எஸ்.யோகித்தைத் தோற்கடித்து 8 புள்ளிகளுடன் 4-வது இடம்பிடித்தார்.
மகளிர் பிரிவு: சென்னை பி.பால கண்ணம்மா, சகஊரைச் சேர்ந்தவரான எம்.சந்தியாவைத் தோற்கடித்து 9 புள்ளிகள் பெற்றார். சென்னை பி.தாமரைச்செல்வி, சென்னை ஏ.அக்ஷயாவிடம் தோல்வியடைந்தார். இதன் மூலம் அக்ஷயாவும் 9 புள்ளிகள் பெற்றார்.
இதையடுத்து டைபிரேக்கர் முறைப்படி அக்ஷயா முதலிடமும், பாலகண்ணம்மா இரண்டாமிடமும் பெற்றனர். சென்னை ஜி.சுஷ்மிதா, கோவை ஆருத்ரா கணேஷைத் தோற்கடித்து 8 புள்ளிகளுடன் மூன்றாமிடம் பெற்றார். என்.எல்.சி.யின் ஸ்ரீஜா சேஷாத்ரி, காஞ்சிபுரம் வி.ஸ்வேதாவைத் தோற்கடித்து 7.5 புள்ளிகளுடன் நான்காமிடம் பெற்றார்.
ஆடவர், மகளிர் பிரிவுகளில் முதல் 4 இடங்களைப் பிடித்தவர்கள், செப்டம்பர் மாதம் ராஜஸ்தானில் நடைபெற உள்ள தேசிய ஜூனியர் செஸ் விளையாட்டுப் போட்டியில் தமிழக சார்பில் பங்கேற்க தகுதிபெற்றுள்ளனர்.
பரிசளிப்பு விழாவுக்கு கோவை மாவட்ட செஸ் சங்கத் தலைவர் பி.கே. செல்வமுருகேசன் தலைமை தாங்கினார். போட்டி நடுவர் அனந்தராமன் வரவேற்றார். ஞானாம்பிகை மில் நிர்வாக இயக்குநர் செந்தில் சின்னசாமி பரிசுகளை வழங்கினார். மாவட்ட செஸ் சங்க செயலர் விஜயராகவன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுக 20 இடங்களில் வென்றாலே ஆச்சரியம்தான்: இபிஎஸ் பேச்சு

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெயிண்ட் விலை அதிகரிப்பு!

வைத்தீஸ்வரன் கோயிலில் நகரத்தார் குலதெய்வ வழிபாடு: திரளானோர் பங்கேற்பு!
நானும் திராவிடன்தான்! சென்னையில் சந்திரபாபு நாயுடு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


