லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

டென்னிஸ்: ஜியோங் சாம்பியன்

கோவை, ஜூலை 21: கோவையில் நடைபெற்ற சர்வதேச டென்னிஸ் போட்டியில் கொரிய வீரர் சுக் யோங் ஜியோங் சாம்பியன் பட்டம் வென்றார்.  சனிக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் கொரியாவின் சுக் யோங் ஜியோங் 6-

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 5:32 pm

கோவை, ஜூலை 21: கோவையில் நடைபெற்ற சர்வதேச டென்னிஸ் போட்டியில் கொரிய வீரர் சுக் யோங் ஜியோங் சாம்பியன் பட்டம் வென்றார்.

 சனிக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் கொரியாவின் சுக் யோங் ஜியோங் 6-2, 7-5 என்ற நேர் செட்களில் இந்தியாவின் என்.விஜய்சுந்தர் பிரசாந்தை வீழ்த்தினார். முதல் செட்டின் 3-வது கேமில் விஜயின் சர்வீûஸ முறியடித்து 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்ற ஜியோங், அடுத்த 3 கேம்களையும் தொடர்ச்சியாக எடுத்தார். 8-வது கேமில் தனது சர்வீûஸ தன்வசமாக்கிய ஜியோங், அந்த செட்டை 6-2 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

 பின்னர் நடைபெற்ற 2-வது செட்டில் முதல் கேமிலேயே தனது சர்வீûஸ ஜியோங்கிடம் இழந்தார் விஜய். இதனால் முதல் 6 கேம்களின் முடிவில் ஜியோங் 4-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். இதன்பிறகு பின்னடைவில் இருந்து மீண்ட விஜய் 5-4 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். கடைசிக் கட்டத்தில் விஜய் செய்த தவறுகளை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ஜியோங், அந்த செட்டை 7-5 என்ற கணக்கில் கைப்பற்றி சாம்பியன் ஆனார்.

 ÷கொரியாவின் குன்கு பல்கலைக்கழக மாணவரான ஜியோங் (19), வென்ற முதல் சர்வதேச சாம்பியன் பட்டம் இதுதான். வெற்றி குறித்துப் பேசிய அவர், "இந்தியாவுக்கு இப்போதுதான் முதல்முறையாக வந்துள்ளேன். கோவையில் நிலவும் இதமான சூழல் மிகவும் பிடித்துள்ளது. கொரிய உணவு கிடைக்காதது கொஞ்சம் கடினமாக இருந்தாலும், சாம்பியன் பட்டம் வென்றது மகிழ்ச்சியளிக்கிறது' என்றார்.

 சாம்பியன் பட்டம் வென்ற ஜியோங்குக்கு, 18 ஏடிபி புள்ளிகள் கிடைத்துள்ளன. இரண்டாவது இடம் பெற்ற விஜய்க்கு 10 ஏடிபி புள்ளிகள் கிடைத்துள்ளன.

 ஜியோங்குக்கு 1,300 அமெரிக்க டாலர்களும், விஜய்க்கு 900 அமெரிக்க டாலர்களும் பரிசாக வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.