கோவை, ஜூலை, 16: கோவையில் நடந்து வரும் சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் திங்கள்கிழமை நடந்த போட்டியில் முன்னிலை வீரர்கள் எளிதில் வெற்றி பெற்றனர்.
தமிழ்நாடு டென்னிஸ் சங்கம், கோவை டென்னிஸ் சங்கம், புரோ சர்வ் டென்னிஸ் அகாதெமி ஆகியவை இணைந்து இப்போட்டிகளை நடத்துகின்றன. கோவை, பெர்க்ஸ் பள்ளி டென்னிஸ் மையத்தில் திங்கள்கிழமை முதல் சுற்றுப் போட்டிகள் நடந்தன.
இரட்டையர் பிரிவில் தர வரிசையில் முதலிடத்தில் உள்ள இந்தியாவின் சாகெத் மைனேனி, ஆர். அருண்பிரகாஷ் ஜோடி, இந்தியாவின் விக்னேஸ்வரன் ரமேஷ், நவீன் சாய் ஜோடியை 7-5, 6-2 என்ற நேர் செட்களில் வென்றது. கொரியாவின் ஹியூன் வூ நம், ஜே மின் சீல் ஜோடி, சிங்கப்பூர் ராய் ஹாப்ஸ், ஆஸ்டின் கரோசி ஜோடியை 5-7, 6-1, 10-3 என்ற செட்களில் போராடி வென்றது.
தரவரிசையில் இரண்டாமிடத்தில் உள்ள என்.விஜய்சுந்தர் பிரசாந்த், கசா விநாயக் சர்மா ஜோடி, இந்தியாவின் பரத்ராம் பாலாஜி, யு.எம். குகன் வர்மா ஜோடியை 6-2, 6-3 என்ற நேர் செட்களில் வென்றது.
கொரியாவின் சுக்-யக் ஜியோங், சியோங் குக் ஓ ஜோடி, இந்தியாவின் சித்தார்த் ரவாத், ரக்ஷய் தக்கார் ஜோடியை 2-6, 7-6, 10-6 என்ற செட் கணக்கில் வென்றது.
தர வரிசையில் நான்காமிடத்தில் உள்ள இந்தியாவின் குனால் ஆனந்த், அஜய் செல்வராஜ் ஜோடி, இந்தியாவின் சந்திரில் சூட், லக்ஷித் சூட் ஜோடியை 6-4, 7-6 என்ற நேர் செட்களில் வென்றது.
இந்தியாவின் விவேக் ஷோகீன், சுதன்வா சீதாராம் ஜோடி, இந்தியாவின் தேஜாஸ் சாகுல்கர், ரஜத் மகேஸ்வரி ஜோடியை 7-6, 6-1 என்ற நேர் செட்களில் வென்றது.
ஆண்கள் ஒற்றையர் போட்டி: முன்னதாக நடந்த ஆண்கள் ஒற்றையர் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் அஸ்வின் விஜயராகவன், குனால் ஆனந்தை 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்றார்.
கொரியாவின் சுக்-யங் ஜியோங், இந்தியாவின் விக்னேஷ் வீரபத்ரனை 6-1, 6-0 என்ற நேர் செட்களிலும், சீனாவின் யாங் லூ, இந்தியாவின் ஜோடின் தாஹியாவை 6-4, 6-0 என்ற நேர் செட்களிலும் வென்றனர். இந்தியாவின் சுதன்வா சீதாராம், சக வீரர் எல்வின் அந்தோனியை 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்

‘சிஎம் சார், 5 வருசத்துல என்ன பண்ணிருக்கீங்க?’ என கேட்டால்... ஸ்டாலின் விளக்கம்!
தவெக தலைவர் விஜய் இன்று எங்கு பிரசாரம் செய்கிறார்?

தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கு நான் டேஞ்சர்! - முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


